ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய பட்ஜெட் எஸ்யூவியின் விபரங்கள்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்க இருக்கிறது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவியின் ஸ்கெட்ச் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் டி ராக் மற்றும் டி க்ராஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை கையில் எடுத்துள்ளது. இந்த எஸ்யூவி மாடல்கள் மிட்சைஸ் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய பட்ஜெட் எஸ்யூவி!

இந்த எஸ்யூவி மாடல்கள் ஃபோக்ஸ்வோகன் குழுமத்தின் MQB A0 பிளாட்ஃபார்மை தழுவி இந்தியாவிற்காக மாற்றங்கள் செய்யப்பட்ட MQB AO IN என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில், இந்த மாடல்களைவிட விலை குறைவான புதிய எஸ்யூவி மாடலையும் ஃபோக்ஸ்வேகன் உருவாக்க இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி-ஸ்போர்ட் என்ற பெயரில் இந்த புதிய பட்ஜெட் எஸ்யூவி மாடல் குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த புதிய எஸ்யூவி மாடலானது பிரேசிலில் வைத்து தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்கப்படும். ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.

அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய பட்ஜெட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போலோ காரின் கட்டமைப்புக் கொள்கைகளுடன் கூபே பாடி ஸ்டைலிலான க்ராஸ்ஓவர் எஸ்யூவியாக வடிவமைக்கப்படுகிறது.

இந்த எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் மற்றும் ஸ்கோடா கமிக் எஸ்யூவி கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் புதிய பட்ஜெட் எஸ்யூவி!

இந்த புதிய எஸ்யூவி மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படலாம்.

அடுத்த ஆண்டு உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்படும். எனினும், இந்த புதிய டி-ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ரூ.10 லட்சம் பட்ஜெட்டிலான எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதால், நிச்சயம் இந்த புதிய மாடலை ஃபோக்ஸ்வேகன் கொண்டு வரும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen is working on the new budget SUV in its global line-up. Likely to be called the Volkswagen T-Sport, this new SUV will see a global unveil sometime next year.
Story first published: Tuesday, September 3, 2019, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X