வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சொகுசு காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியானது உலகிலேயே அதிக பாதுகாப்பு அம்சங்களை பெற்ற கார் மாடலாக பெருமை பெற்றிருக்கிறது. மேலும், சொகுசு அம்சங்களிலும் மிகச் சிறப்பான மாடலாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் இந்த கார் மொமென்ட்டம் லக்சுரி, இன்ஸ்க்ரிப்சன் லக்சுரி மற்றும் எக்சலென்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைத்து வருகிறது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், எக்ஸ்சி90 எஸ்யூவியின் மிக சொகுசான புதிய வேரியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது வால்வோ நிறுவனம். கஸ்டமைஸ் செய்யப்பட்ட சொகுசு கார் போல நிறுவனத்திடமிருந்து நேரடியாக வந்துள்ள இந்த கார் 3 இருக்கைகளை மட்டுமே கொண்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அதாவது, ஓட்டுனர் இருக்கையை தவிர்த்து, பின்புறத்தில் இரண்டு சொகுசான கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் எல்லாம், பயணிப்பவருக்கு தேவையான பொழுதுபோக்கு மற்றும் இதர சொகுசு அம்சங்களை இந்த வேரியண்ட்டில் வழங்கி உள்ளது வால்வோ நிறுவனம். இந்த புதிய வேரியண்ட்டிற்கு எக்சலென்ஸ் லான்ச் கன்சோல் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் இடதுபுற பின் இருக்கையில் அமர்பவருக்கு தனியாக கால்களை சாவகாசமாக வைத்துக் கொண்டு செல்வதற்கான லெக் ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சிறிய டேபிள், பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வதற்கான ஸ்டோரேஜ் அறை, சிறிய குளிர்சாதனப் பெட்டி, மது கோப்பைகளை வைப்பதற்கான வசதியுடன் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவற்றுடன் கஸ்டமைஸ் கார் போல மாறி இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் இரண்டு பின் இருக்கைகளும் மிக சொகுசான அம்சங்களை பெற்றிருப்பதுடன், விருப்பம்போல் சாய்த்துக் கொள்வதற்கான வசதியையும் பெற்றுள்ளது. ஜன்னல்களில் சன் ஷேடு திரையும் உள்ளது. கண்ணாடி கூரை உள்ளிட்ட இதர பிரிமீயம் அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியில் டர்போசார்ஜர் மற்றும் சூப்பர்சார்ஜர் துணையுடன் இயங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் மின் மோட்டாரும இணைந்து செயலாற்ருவதால், இது ஹைப்ரிட் எரிநுட்பத்தில் இயங்குகிறது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 401 பிஎச்பி பவரையும், 640 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பெட்ரோல் எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் அதிசொகுசான 3 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் ரூ.1.42 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனஐக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாகவே வெறும் 15 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனவே, மிக அரிதான மாடலாகவே இது விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2019, 10:33 [IST]
English summary
Swedesh luxury car maker, Volvo has launched the XC90 Excellence Lounge console variant in India, with prices starting at Rs 1.42 crores (ex-showroom, all India).
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+