வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

இந்தியாவில் புதிய வாகனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அதே வேலையில், பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான பணிகளுக்கும் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. அந்தவகையில், கனரக வாகனங்களுக்கு ஆப்பு வைக்கின்ற வகையிலான ஓர் பழைய திட்டத்தை அரசு மீண்டும் புதுப்பித்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

இந்தியாவில் எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அறிவிக்கப்படாத போரை மத்திய அரசு தொடுத்து வருகின்றது.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

இத்துடன், மாநில அரசுகள் சிலவும், அதே முயற்சியை எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கம் போக்குவரத்துத்துறையும், அந்தவகையிலான அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள திட்டம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

அந்தவகையில், மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் சரக்கு (வர்த்தக) வகாகனங்களை பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டு வருகின்றது.

முன்னதாகவே, கொல்கத்தா உயர்நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், கொல்கத்தா பெருநகர பகுதியில் இயங்கும் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் 15 ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டில் இருக்கக்கூடாது என கூறப்பட்டிருந்தது.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

இருப்பினும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பழைய வணிக வாகனங்கள் இன்னும் பெருநகரத்தில் பயன்பாட்டில் இருப்பதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் போக்குவரத்துத்துறை மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்விலும், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வருடங்கள் பழைய வாகனங்கள் கொல்கத்தாவில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. அவை, கொல்கத்தா பெருநகரத்தின் உரிமமின்றியும், சிஎஃப் (certificate of fitness) சான்று மற்றும் பியுசி (pollution under control) இல்லாமலும் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

இதுபோன்ற வாகனங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்மூலம் 15 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்காக அமைக்கப்பட்ட டிஜிட்டல் செக்போஸ்ட்டுகளாலேயே இத்தனை எண்ணிக்கையிலான வாகனங்கள்பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

மேலும், இந்த டிஜிட்டல் செக்போஸ்ட்டுகளை தற்போது வரை பயன்படுத்தி வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த செக்போஸ்ட்டுகள் மூலம், பழைய வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், நகரத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

இந்த வாகனங்கள் கொல்கத்தா வீதிகளில் செல்வதைத் தடுக்காவிட்டால், மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் நகரத்தின் நம்பிக்கை இழக்கப்படும் என சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

மேலும், இதுகுறித்து பசுமை ஆர்வலரான சுபாஷ் தத்தா கூறுகையில், "மாநிலத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும், டீசலால் இயங்கும் வாகனங்களே அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. மாநிலத்தில் இயங்கும் வாகனங்களில் 99 சதவீதம் டீசல் வாகனங்களாகவே இருக்கின்றன. இவை, காற்றில் நஞ்சை கலந்து வருகின்றன. இந்த வாகனங்கள் முறையான ஆவணங்களின்றி மாநிலத்தில் இயங்குவது, நிர்வாக சீர்கேட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது" என கருத்து தெரிவித்தார்.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

மேலும், பேசிய அவர், "கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட சாதாரண ஆய்வில், சுமார் 1,98,393 வாகனங்கள் அதிகளவு மாசை வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த வாகனங்களிடம் இருந்து ரூ. 2.8 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேசமயம், இந்த வாகனங்கள் அனைத்தும் 15 வருடங்களுக்கும் குறைவான வயதுடையவாகும். அப்படியானால், 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் எந்த அளவிற்கு மாசினை வெளிப்படுத்தும்" என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

டிஜிட்டல் செக்போஸ்ட்டுகள் நவீன திறன்கொண்ட கேமிராக்கள்மூலம் இயங்குகின்றன. இவை, கொல்கத்தா பெருநகர பகுதியின் வாகன பதிவு டேட்டாபேஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், எந்தவொரு வாகனமும் நகரத்தில் நுழைய அல்லது வெளியேறும்போது, அவற்றின் நம்பர் பிளேட்டுகள் ஸ்கேன் செய்யப்படுகின்றது. அவ்வாறு கிடைக்கப்படும் தரவைக் கொண்டு வாகனம் புதியதா... அல்லது பழையதா என ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

வணிக வாகன உரிமையாளர்களை அதிர வைக்கும் திட்டம்... அடுத்த ஆப்பு சரக்கு வாகனங்களுக்கு...!

அவ்வாறு, ஆய்வு மெற்கொள்ளும்போது, அந்த வாகனம் 15 ஆண்டுகளுக்கும் பழமையானவையாக இருப்பின், உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையானது வரும் காலகட்டத்தில் தீவிரப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

Source: auto.economictimes

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2019, 13:10 [IST]
English summary
West Bengal Commercial Vehicles Confiscate. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+