காசை கரி ஆக்காதீங்க... பல லட்சம் கொட்டி கொடுத்து கார் வாங்குவதை விட பைக்தான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

பல லட்ச ரூபாய் கொட்டி கொடுத்து கார் வாங்குவதை விட பைக் வாங்குவதுதான் சிறந்தது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

பைக்குகள் சிறந்தவையா? அல்லது கார்கள் சிறந்தவையா? என்ற விவாதம் மிக நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. உண்மையில் இவை இரண்டுமே 'பாஸிட்டிவ் சைடு' கொண்டதாகவே இருக்கின்றன. அதாவது பைக்குகளிலும் சில நன்மைகள் இருக்கின்றன. கார்களிலும் சில நன்மைகள் இருக்கின்றன. எனவே பைக்தான் பெஸ்ட் அல்லது கார்தான் பெஸ்ட் என திட்டவட்டமாக கூற முடியாது.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

எனினும் ஒரு சில விஷயங்களில் பார்த்தால், கார்களை காட்டிலும் பைக்குகள்தான் மிகவும் சிறந்தவையாக இருக்கின்றன. கார்களுடன் ஒப்பிடும்போது எந்தெந்த விஷயங்களில் மோட்டார்சைக்கிள்கள் தலைசிறந்து விளங்குகின்றன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

டோல்கேட்: பைக்குகளுக்கு டோல்கேட் கட்டணம் இல்லை. இதன் மூலம் பணத்தை மட்டுமே நீங்கள் சேமிப்பது கிடையாது. அதனுடன் சேர்த்து பொன்னான நேரத்தையும் உங்களால் சேமிக்க முடியும். ஏனெனில் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல பைக் ரைடர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

தற்சமயம் டோல்கேட்களிலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில், டோல்கேட்களில் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். எனவே சுங்க சாவடிகளில், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க வரும் டிசம்பர் 1 முதல் பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால் பைக்குகளுக்கு இந்த பிரச்னை இல்லை.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

போக்குவரத்து நெரிசல்: தற்போது இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகமாகி கொண்டே செல்கிறது. இப்படிப்பட்ட சாலைகளில் பயணிக்க வேண்டுமென்றால், காரை காட்டிலும் நிச்சயமாக பைக்தான் பெஸ்ட். ஏனெனில் பைக் செல்வதற்கு சிறிய 'கேப்' கிடைத்தால் கூட போதுமானதுதான்.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

ஆனால் காரில் இது கண்டிப்பாக சாத்தியமே இல்லை. கார் செல்ல வேண்டுமென்றால் அதிக இடம் தேவை. எனவே இதுபோன்ற சூழல்களில் நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை விரைவாக அடைய பைக்தான் அதிகம் உதவி செய்யும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்திய சாலைகளுக்கு உகந்தது காரா? அல்லது பைக்கா? என கேட்டால், நிச்சயமாக பைக்தான் சிறந்தது.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

பார்க்கிங்: போக்குவரத்து நெரிசலில் சிறிய இடைவெளி கிடைத்தால் கூட புகுந்து வந்து விடலாம் என்பதை போல், சிறிய இடம் கிடைத்தால் கூட பைக்கை பாதுகாப்பாக பார்க்கிங் செய்து விட முடியும். ஆனால் கார் எனும்பட்சத்தில் இது சாத்தியமில்லாத ஒன்று. தற்போதைய நகர சாலைகள் மிகவும் குறுகலாகி கொண்டே வருகின்றன.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

ஷாப்பிங் உள்பட எங்கு சென்றாலும் பார்க்கிங்கிற்கு இடம் தேடி அலைய வேண்டியுள்ளது. எனவே எப்படி பார்க்கிங் செய்வது? என்பதற்கு பயந்து கொண்டே பலர் ஒரு சில இடங்களுக்கு செல்லும்போது கார்களை தவிர்க்கின்றனர். எனவே இந்த விஷயத்திலும் காரை காட்டிலும் பைக்தான் சிறந்தது என அடித்து சொல்லலாம்.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

சுற்றுச்சூழல்: கார்களுடன் ஒப்பிடும்போது பைக்குகளை இயக்குவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. அது மட்டுமல்லாது பைக்குகளை விட கார்கள்தான் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றன. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்தது காரா? அல்லது பைக்கா? என்றால், நிச்சயமாக பைக் என்றுதான் சொல்ல வேண்டும்.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

சுதந்திரம்: பைக்கில் உங்களால் தனியாக பயணம் செய்ய முடியும். சிங்கிள் சீட் மட்டுமே கொண்ட பைக்கை தேர்வு செய்வதன் மூலமாக நீங்கள் பில்லியனை கூட தவிர்த்து விடலாம். யாருடைய தொந்தரவும் இல்லாமல் இயற்கையை மட்டும் ரசித்து கொண்டு சுதந்திரமாக பயணிக்க மோட்டார்சைக்கிள்தான் நிச்சயமாக சிறந்தது.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

பெர்ஃபார்மென்ஸ்: கார்களை விட பைக்குகள் விலை குறைவானவை மட்டும் கிடையாது. பைக்குகள் மிகவும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸையும் வழங்க கூடியவை. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6 வினாடிகளுக்கு உள்ளாக எட்ட வேண்டுமென்றால், 6 சிலிண்டர் இன்ஜின் லக்ஸரி காரை வாங்க நீங்கள் குறைந்தபட்சம் 60 லட்ச ரூபாயை செலவிட வேண்டும்.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

ஆனால் வெறும் 2.30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் ட்யூக் 390 இதனை அசால்டாக செய்து விடும். ஜீரோவில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் எனும் வேகத்தை எட்ட கேடிஎம் ட்யூக் 390க்கு தேவைப்படும் நேரம் வெறும் 5.98 வினாடிகள் மட்டுமே. இந்த வகையில் பார்த்தால், கார்களை விட பைக்குகளின் கையே மேலோங்குகிறது.

60 லட்ச ரூபாய் கார் செய்யும் வேலையை சாதாரண பைக் அசால்டாக முடிக்கும்... இப்போ சொல்லுங்க எது பெஸ்ட்?

பராமரிப்பு: கார்களுடன் ஒப்பிடும்போது மோட்டார்சைக்கிள்களை பராமரிப்பது மிகவும் எளிது. கார்களை விட பைக்குகள் ஏன் சிறந்தவை? என்பதற்கு ஒரு சில காரணங்களை மட்டும் வழங்கியுள்ளோம். கார்களை விட பைக்குகள் ஏன் பெஸ்ட்? என்பதற்கு உங்களுக்கு ஏதேனும் காரணங்கள் தெரிந்தால், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2019, 13:22 [IST]
English summary
Why Bikes Are Better Than Cars. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+