ஏன் பஞ்சரான வாகனத்தை இயக்க கூடாது: இந்த வீடியோவை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்...
பஞ்சரான காரை ஏன் இயக்கக்கூடாது என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சக்கரம், மனிதன் கண்டுபிடித்ததிலேயே மிக முக்கியமான ஓர் கண்டுபிடிப்பாக இருக்கின்றது. மனிதர்கள் தங்களின் வளர்ச்சியில், முக்கியமான மைல்கல்லை எட்ட இதுவும் ஓர் காரணமாக இருக்கின்றது.

பண்டைய கால மனிதர்கள் கண்டுபிடித்த பல கருவிகள் தற்போது உரு தெரியாமல் அழிந்துவிட்டநிலையில், பல நூற்றாண்டுகளைக் கடந்து தற்போது வரையிலும் பயன்படுத்தப்படும் ஓர் உபகரணமாக சக்கரங்கள் இருக்கின்றன.

இந்த சக்கரங்கள் தற்போது பல பரிணாமங்களைப் பெற்றிருந்தாலும், பண்டைய மனிதர்கள் வித்திட்ட எந்தவொரு அமைப்பும், அதாவது அதன் உருளைத் தன்மை மாற்றப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனென்றால் உருளைத் தன்மைதான், சக்கரம் அடுத்த இலக்கை அடைய தூண்டுகோலாக இருக்கின்றது.

முந்தைய காலகட்டத்தில், இந்த சக்கரங்கள் குதிரை, கழுதை மற்றும் மாடு போன்ற விலங்குகள் இழுத்துச் செல்லும் வகையில் மரத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. இத்துடன், எளிதில் சேதமடைந்துவிடமால் இருக்க அதனை சுற்றி இரும்பு வளையம் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆனால், அவை தற்போது முற்றிலும் இரும்பால் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், சாலையில் மென்மையாக பயணிக்க, ரப்பரால் உருவாக்கப்பட்ட டயர்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைக்கொண்டு, ஓர் வாகனத்திற்கு எந்த அளவிற்கு சக்கரம் முக்கியம் என்பதை நம்மால் உணர முடியும். அதேபோன்று, அதில் பொருத்தப்படும் டயர் மற்றும் காற்றின் பயன்பாடுகுறித்த தகவலை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

இருப்பினும், காற்றில்லாமல் கார் அல்லது பைக்கை இயக்கினால், அது எந்த அளவிற்கு சேதத்தை உருவாக்கும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்றாக இருக்கின்றது. இதனை விளக்கும் வகையில் இந்தியன் ஹேக்கர் யுடியூப் தளம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நீங்கள் கீழே காணலாம்...
இந்த பரிசோதனையை உங்கள் கார்களில் செய்துபார்க்க முயற்சிக்க வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்..
பொதுவாக, சாலையில் எந்தவொரு அசௌகரியமான உணர்வையும் பெறாமல் இயங்குவதற்கு டயர்களே முக்கியமாக இருக்கின்றது. வீல்களுடன் ரப்பர் டயர் இணைப்பதை 1900ம் ஆண்டுகளுக்கு பின்னரே மனிதன் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளான். அதுதான் தற்போது வரை பயன்பாட்டிலும் இருந்து வருகின்றது.

அதேசமயம், இந்த டயரின் பலனை முழுமையாக அடையும் வேண்டுமானால், அதில் காற்று நிரப்புவது கட்டாயமானதாக இருக்கின்றது. இது நாம் மறுக்க முடியாத உண்மை. காற்று தேவைப்படாத டயர்கள்கூட தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அவை அதிவேகத்தின்போது சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன.

இதன்காரணமாகவே, அதிகமாக காற்றி நிறைக்கும் டயர்கள் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், இந்த டயர்களில் காற்று இல்லையென்றால், அவை நமக்கு பேராபத்தை ஏற்படுத்துவிடும். இதன்காரணமாகவே, ஒவ்வொரு முறையும் வாகனத்தை வெளியே எடுக்கும்போது, காற்றி இருக்கின்றதா என்பதை பரிசோதித்துவிட்டு எடுக்க வேண்டும் என வாகனத்துறை சார்ந்த வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில், டயர் மற்றும் காற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், இந்தியன் ஹேக்கர் யுடியூப் தளம் வீடியோ இந்த வீடியோவினை வெளியிட்டுள்ளது.
மாருதி சுஸுகி எஸ்டீம் காரின் உரிமையாளர், அதன் வீலில் இருந்து முழுவதுமாக காற்றை வெளியேற்றி விடுகின்றார். பின்னர், அந்த காரைக் கொண்டே சிறிது தூரம் பயணம் மேற்கொள்கின்றார்.

அப்போது, சேதத்தை முழுமையாக அறிந்துகொள்ளும் விதமாக, காற்று வெளியேற்றப்பட்ட டயரை கண்கானிக்கும் வகையில் கேமிரா ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அது, நமக்கு மிகவும் தெளிவான படத்தை எடுத்து காட்டியுள்ளது.

அவ்வாறு, எடுக்கப்பட்ட வீடியோவை பார்க்கும்போதே நம்மால் உணர முடிகின்றது. காற்றில்லாமல், கார் சாரட்டு வண்டியைப்போல் குலுங்கியவாறு செல்கின்றது.
அத்துடன், வீடியோவின் இறுதியில் காரின் சக்கரம் முழுவதுமாக சேதமடைந்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது.

பொதுவாக, காற்றில்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் முறையான கட்டுபாட்டை நமக்கு வழங்காது. இதே பின்விளைவைதான் மாருதி சுஸுகி எஸ்டீம் காரின் உரிமையாளரும் அனுபவதித்துள்ளார்.
அதேசமயம், அதிவேகத்தின் கார் பஞ்சராகினால், காரின் கட்டுப்பாட்டை இழப்பதுடம் பெரும் விபத்தை ஏற்படுத்திவிடும்.

அதேபோன்று, பஞ்சர் கடை இல்லாத காரணத்தால், காற்றில்லா டயரை வைத்து காரை இயக்குவதனால், டயர் முற்றிலும் சேதமடைவதுடன், காரின் ரிம் உள்ளிட்டவை மிகப்பெரிய சேதத்தை சந்தித்துவிடும்.
அதேபோன்று, குறைவான காற்றை வைத்து வாகனத்தை இயக்குவதனால், டயரின் பக்கவாட்டு சேதமடைவதுடன், பின்னர், காற்று முழுமையாக நிரப்பும்போது வெடித்து சிதறும் சூழல் ஏற்படும்.


Click it and Unblock the Notifications