எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

உலகின் அதிகவேகமான மற்றும் முதல் எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் ஃபெர்ராரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்குகின்றது ஃபெர்ராரி நிறுவனம். இந்நிறுவனம், அதிநவீன சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை தாயரிப்பதில் சிறந்து விளங்குகின்றது.

இந்நிறுவனத்தின் கார்கள் தற்போது வரை பல இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்து வருகின்றது. இதற்கு இந்த காரில் உள்ள சிறப்பு அம்சம் மற்றும் அதீத திறனுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

அதேசமயம், ஃபெர்ராரி நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் அவ்வளவு எளிதில் வாங்கக்கூடிய விலையில் இருப்பதில்லை. ஏனென்றால், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டவையாக இருக்கின்றன.

இதன்காரணமாகவே, இன்னும் இந்நிறுவனத்தின் கார்கள் பலருக்கு எட்டா கனியாகவே இருக்கின்றது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

ஃபெர்ராரி தயாரிக்கும் பெரும்பாலான மாடல்கள் கூப் ரக ஸ்போர்ட்ஸ் காராகவே இருக்கின்றன. ஆகையால், இதில் மற்ற ரக கார்களை பார்ப்பது முடியாத ஓர் விஷயமாக இருக்கின்றது.

இந்நிலையில், பென்ட்லீ, லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் அஸ்டன் மார்டின் ஆகிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களின் வரிசையில் ஃபெர்ராரி நிறுவனமும் இணைந்து, அதன் முதல் எஸ்யூவி ரக காரை தயாரித்து வருவதாக அறிவித்துள்ளது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

இந்த நிறுவனம், எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். இந்த அறிவிப்பை கடந்த 2018ம் ஆண்டே அதிகாரமாக ஃபெர்ராரி அறிவித்துவிட்டது. ஆகையால், பெர்ராரியின் எஸ்யூவி கார் வருகின்ற 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

ஆனால், 2022ம் ஆண்டில்தான் எஸ்யூவி ரக ஃபெர்ராரி சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சில நாட்கள் கழித்து அறிவித்தது.

இந்த கால தாமதத்திற்கு ஃபெர்ராரி நிறுவனம் ஓர் தகுந்த காரணத்தை கூறியுள்ளது. இந்த காரை, உலகின் அதி வேகமான எஸ்யூவி ரக காராக தயாரிக்கும் பொருட்டே இந்த இழுத்தடிப்பை அது மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

தற்போது, அதிக திறன் கொண்ட எஸ்யூவி ரக காராக ஜீப் கிராண்டே செரோக்கி டிராக்ஹாக் கார் இருக்கின்றது. இது, 707க்கும் அதிகமான பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த திறனைக் காட்டிலும் அதிக திறனை புதிதாக தயாராகிக் கொண்டு வரும் எஸ்யூவி ரக ஃபெர்ராரி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

ஜீப் நிறுவனத்தின் இந்த அதீத திறன் கொண்ட காரை இந்தியாவிலேயே நம்ம தல தோனி ஒருவர் மட்டும்தான் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த காருக்கு போட்டியாக அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் புதிய ஃபெர்ராரி எஸ்யூவி கார் உருவாகி வருகின்றது. ஆகையால், உலகின் அதிவேகமான எஸ்யூவி கார் என்ற புகழை அது சூழ இருப்பது தற்போதே தெரிகின்றது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

ஃபெர்ராரி நிறுவனம் இந்த காருக்கு 'ப்ரோசங்' (Purosangue) என்ற பெயரை வைத்துள்ளது. இதற்கு சுத்தமான ரத்தம் என்று பொருள்.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

இதுகுறித்து அந்நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி மைக்கேல் லெய்டர்ஸ் கூறியதாவது,

"எஸ்யூவி ரக கார் விரும்பிகளைக் கவரும் வகையில், இந்த புதிய ரக காரை தயாரித்து வருகின்றோம். இது மற்ற எஸ்யூவிக்களை காட்டிலும் வித்தியாசமாக தெரியும் வகையில் மிகப் பெரிய மாற்றங்களைப் பெற்று உருவாக்கப்பட்டு வருகின்றது" என தெரிவித்தார்.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

ஃபெர்ராரியின் இந்த புதிய எஸ்யூவி ரக கார்குறித்த மற்ற அனைத்து தகவல்களும் ரகசியமாக காக்கப்பட்டு வருகின்றது.

ஒட்டுமொத்தமாக ஃபெர்ராரி நிறுவனம், 15 புதிய கார்களை 2023ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவை இரண்டு வகையில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில் சூப்பர் கார்களைப் போன்று நடுத்தர எஞ்ஜின் மற்றும் ஜிடி ஸ்டைலிலான முன்பக்க நடுத்தர எஞ்ஜினில் கிடைக்க உள்ளது.

எஸ்யூவி ரகத்தில் வரும் ராட்சசன்... ஃபெர்ராரியின் சிறப்பான தயாரிப்பு பற்றிய தகவல்!

அதேசமயம், இதன் எஞ்ஜின் தரம் குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், புதிய ப்ரோசாங் எஸ்யூவி கார் வி6, வி8, வி12 போன்ற எஞ்ஜினில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், ஹைபிரிட் அல்லது மின்சார தேர்விலும் இந்த கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2019, 16:25 [IST]
English summary
World's Fastest SUV Car Under Working By Ferrari. Read In Tamil.
மேலும்... #ஃபெராரி #ferrari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+