விற்பனையை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த ஹூண்டாய்... போட்டி நிறுவனங்கள் கலக்கம்...
விற்பனையை அதிகரிக்க ஹூண்டாய் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளது. ஹூண்டாயின் இந்த நடவடிக்கையால் மற்ற போட்டி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.

image source: 1&2 oneindia
எந்த பொருளையும் வாங்குவதற்கு முன்பாக அதனை ஒரு முறை சோதித்து பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சோதித்து பார்ப்பதன் மூலம் அந்த பொருள் நமக்கு ஏற்றதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளமுடியும். மேலும், அந்த பொருள் வேலை செய்யும் நிலையில் தான் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள அது உதவும். இது நமக்கு ஓர் மன நிம்மதியைக் கொடுக்கும்.

இதன்படி, மனிதர்கள் தாங்கள் வாங்கும் ஐந்து ரூபாய் பேனா முதல் சட்டை வரை பல்வேறு பொருட்களை ஒரு உபயோகப்படுத்திவிட்டு தான் அதனை வாங்கிச் செல்கின்றனர். வாடிக்கையாளர்களின் இந்த தேவையை உணர்ந்த பல்வேறு நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை விற்பனை நிலையங்களில் சோதித்து பார்ப்பதுக்கு என்று ஒரு சாதனத்தைக் கொடுத்துவிடுகின்றனர்.

image source: 3&4 gizbot
இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், அவர்கள் எதிர்பார்த்துவரும் பொருளின் சோதனை கருவியைச் சோதித்து பார்த்துவிட்டு வாங்கிச் செல்கின்றனர். இதேப்போல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும், அவர்கள் விற்கும் பொருட்களுக்கு பத்து நாள் ரிபிளேஸ்மெண்ட் வாரண்டியை வழங்கி வருகின்றனர்.

அதன்படி, ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், வாங்கிய பொருட்களில் ஏதேனும் குறையிருப்பதைக் கண்டறிந்தால் குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் முறையிட்டு அதற்கு பதில் வேறு பொருளை வாங்கிக்கொள்ளலாம்.
இவ்வாறு உலகம் நவீன மயமாகி வரும்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள சான்ட்ரோ காரை டெஸ்ட் டிரைவ் செய்ய அமேசான் அலெக்ஸா மூலம் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வெர்சுவல் அசிஸ்டெண்டான அமேசான் அலெக்ஸா கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் இயங்குகிறது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் சந்தைக்குள் நுழைந்தது. இந்த அமேசான் அலெக்ஸா தற்போது ஓலா, உபர் ஆகிய வாடகை கார் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

வெர்சுவல் அசிஸ்டெண்டை பயன்படுத்தும் ஆப்பினை பயன்படுத்தி கார்களை எளிதில் புக் செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து, அதே ஆப் மூலம் வீட்டில் உள்ள ஏசி, டிவி, ஸ்மார்ட் பேன் ஆகியவற்றையும் சுலபமாக கட்டுபடுத்த முடியும்.

அதேப்போல, அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் உள்ள பொருட்களையும் இந்த செயலி மூலம் எளிதில் ஆர்டர் செய்யலாம். உதாரணமாக, ஒரு பென்டிரைவ் வாங்கவேண்டும் எனில், அந்த பென்டிரைவ் பிராண்ட்டின் பெயரைக் குறிப்பிட்டு ஆர்டர் செய்யலாம்.

மேலும், இந்த அமேசான் வெர்சுவல் அசிஸ்டெண்ட் மூலம் கிரிக்கெட் லைவ் ஸ்கோர், லேட்டஸ்ட் நியூஸ், பாடல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் கேட்டு மகிழலாம்.

இந்நிலையில் தான் அமேசான் அலெக்ஸா வெர்சுவல் அசிஸ்டெண்ட் மூலம் சான்ட்ரோ காரினை டெஸ்ட் டிரைவுக்கு புக் செய்யும் வசதியினை ஹூண்டாய் கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கார் ஷோரூம்களைத் தேடிச்சென்று புக் செய்யும் அவல நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் இந்த யுக்தியை கையாண்டுள்ளது. இதனால் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சற்று கலக்கமடைந்துள்ளது என்றே கருதலாம்.

புதிய சான்ட்ரோ கார் 235 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியுடையது. இந்த கார் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சான்ட்ரோவில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது எஞ்ஜினுக்கு அதிகபட்சமாக 69 பிஎஸ் பவரையும், 99 என்எம் டார்க்யூ திறனையும் வழங்குகிறது.

மேலும், புதிய சான்ட்ரோ காரில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தை எளிதில் புக் செய்து டெஸ்ட் டிரைவ் செய்யும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் அமேசான் அலெக்ஸாவை நியமித்துள்ளது. இது ஹூண்டாய் வாடிக்கையாளர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications








