சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப் காரை இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வைத்து எரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

சமூக வலை தளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்கு, இளைஞர்கள் பலர் வித்தைகளைக் காட்டியவாறு வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர்.

இத்தகைய இளைஞர்களைக் கவருகின்ற வகையிலான செல்ஃபோன் மென்பொருள்கள் அண்மைக் காலங்களாக அதிகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, அறிமுகம் செய்யப்பட்ட செயலிதான் டிக்டாக்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

இந்த மென்பொருள், இளைஞர்களின் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் பின்னணியில் இசை அல்லது வசனத்தை ஒலிக்க செய்து, அவர்களின் அசைவுகளை பதிவு செய்யும். மேலும், அவர் மட்டுமின்றி அந்த வீடியோவை உலகமே பார்க்கும் வகையில் வைரலாக்கும். இதனால், தற்போதைய இளம் சந்ததியினர் பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் இவற்றிற்கு அடுத்தபடியாக டிக்டாக் செயலிலையும் பயன்படத்தி வருகின்றனர்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

மேலும், உலகளவில் டிரெண்டாக வேண்டும் என்பதற்காக, சில வீடியோக்களை அவர்கள் வெளியிடுகின்றனர். அவ்வாறு, வெளியிடும் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தாத வரை அவர்களுக்கு நல்லதுதான். மாறாக, விதிகளை மீறும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டால், அதற்கான பலனை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர், டிக்டாக் வீடியோவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, அவரது ஜீப்பை பொது சாலையின் மையப் பகுதியில் வைத்து தீயிட்டு கொளுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

இச்சம்பவம், ராஜ்கோட் பகுதியில் உள்ள பிரபல கோத்தாரியா சாலையில் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், அதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. வீடியோவில், ஜீப்பின் முன்பக்கம் சாதரணமாக நின்றுக் கொண்டிருந்த ஓர் இளைஞர், அதன்மீது தீக்குச்சியை வீசுகின்றார். உடனே, அந்த கார் மலமலவென பற்றிய எரிய ஆரம்பிக்கின்றது. இதற்கு முன்னதாக அந்த கார்மீது, அவர் எரிபொருள் ஊற்றியிருந்தார். இதன்காரணமாகவே, அந்த கார் மலமலவென தீ பற்றியெரிந்தது.

இச்சம்பவம் குறித்து அறிந்த வந்த போலீஸார், அந்த இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அதேசமயம், சம்பவம் தீயணைப்பு துறை நிலையத்திற்கு முன்னதாகவே நடைபெற்றதால், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், இதுகுறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

இச்சவம்பத்தை அரங்கேற்றியவர் அதேப் பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் ஜடேஜா என்பது தெரியவந்துள்ளது. இவர், ஜீப்பை எரித்த வீடியோவை, அவரது சொந்த டிக் டாக் கணக்கில் பதிவிட்டாரா அல்லது வேறு யாரேனும் கணக்கில் பதிவிட்டாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அவர் காரை கொளுத்திவிட்டு நேராக கேமிராவை நோக்கி வருவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

பல்வேறு பிரிவுகளின் வழக்குபதிந்து கைது செய்யப்பட்டுள்ள இந்திரஜித்துக்கு புதுவிதமான தண்டனை வழங்கப்படும் என ராஜ்கோட் பகுதி காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர்மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்ற தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

மேலும், தீயிடப்பட்ட ஜீப் பல்வேறு மாற்றங்களைப் பெற்றதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பெரியளவிலான சக்கரங்கள், கூடுதல் அணிகலன்கள் உள்ளிட்டவை காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்த ஜீப் சாலையில் செல்லும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்... வீடியோ!

இந்திரஜித் மேற்கொண்டிருக்கும் இச்செயலை பொது சாலைகளில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புரம்பானதாகும். இதுபோன்ற செயல் பல நேரங்களில் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். ஆகையால், பொதுவெளியில் இத்தகைய செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

அதேசமயம், இச்சம்பவத்தில் வேறெந்த வாகனத்திற்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை. ஆகையால், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youngster Burns Jeep For Tik Tok Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X