Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பள்ளி பேருந்தை திருடிய பொடியன்! சொன்னாரு பாருங்க ஒரு காரணம் காவல் நிலையமே ஃப்ரீஸ் ஆய்டுச்சு! வீடியோ!
ஸ்டியரிங் வீலை முழுசாகூட பிடிக்க முடியாத ஓர் சிறுவன், பள்ளி பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்-படுத்தியுள்ளது.

பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் சக மாணவர்களின் பென், பென்சில், புத்தகம் போன்றவற்றை திருடுவதை நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்போம், பார்த்தும் இருப்போம். ஆனால், இங்கு மிக வித்தியாசமாக, ஓர் பள்ளி மாணவன் தனது பள்ளியின் பேருந்தை திருடிச் சென்றிருக்கின்றார். அவர், ஏன் அப்பேருந்தைத் திருடிச் சென்றார் என்பதுதான் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது.

Image Courtesy: WAFB
இந்த சம்பவம் அமெரிக்காவின், லூசியான மாகாணத்தில் உள்ள பேடன் ரூஜ் எனும் நகரத்திலேயே அரங்கேறியிருக்கின்றது. பேருந்தை திருடிய சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவருடைய வயது 11 என்று கூறப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றதாக பேடன் ரூஜ் நகர காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பேருந்தைத் திருடிய சிறுவன், அந்நகரத்தின் பல்வேறு சாலைகளில் வட்டமடித்துள்ளார். குறிப்பாக, விதிமீறல்கள் மற்றும் பிற வாகனங்கள் மீது மோதியவாறு அவர் பயணித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், அப்பேருந்தை விரட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், சிறுவனோ போலீஸாரிடம் சிக்காமல் ஆட்டம் காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறு சுமார் 21 கிமீ தூரம் வரை போலீஸாருக்கு சிறுவன் தண்ணிக் காட்டியிருக்கின்றார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து மரத்தின் மீது மோதியது. இதனால், மீண்டும் அங்கிருந்து அச்சிறுவனால் தப்பிச் செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்ட போலீஸார், சிறுவனையும், பேருந்தையும் உடனடியாக மடக்கிப்பிடித்தனர்.

தொடர்ந்து அவரைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றார். அப்போது அவரிடம் விசாரித்ததில், அனைவரையும் அதிர்ச்சியில் உறையை வைக்கும் தகவலை சிறுவன் கூறினார். தான், ஜாலி ரைடு செய்வதற்காகவே பள்ளி பேருந்தை திருடியாதக தெரிவித்திருக்கின்றார்.

சிறுவனின் இந்த பதில் அனைத்து போலீஸாரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும், சிறுவனின் அத்துமீறலால் தனியாருக்கு சொந்த நிலம் மற்றும் உடமைகள் கடுமையாக சேதமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்க நியூஸ் சேனலான ஏபிசி 11 வெளியிட்ட செய்தியில், எரிவாயு இணைப்பு பாதை, வாகனங்கள், பொது இடங்கள் என பல கடுமையாக சேதமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஜாய் கிராட்னி என்ற இளம்பெண் கூறியதாவது, "நான் இதை துளியளவும் எதிர்பார்க்கவில்லை. இந்தளவு சிறிய பையன் எப்படி அவ்வளவு பெரிய பேருந்தை இயக்கினான் என்பது இப்போதும் புரியவில்லை. அவன், ஒவ்வொரு முறையும் பேருந்து நகரும்போது மிகுந்த உற்சாகத்துடன் சிரித்தான். கூச்சலும் இட்டான். அப்போதும்கூட என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்ட வசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகவில்லை" என்றார்.

மேலும், இச்சம்பவத்தை ஜாய் கிராட்னி தனது செல்போனில் படம்பிடித்துக் கொண்டே, அதைக் கண்டதாக போலீஸிடம் தெரிவித்துள்ளார். தற்போது சிறுவனைக் கைது செய்திருக்கும் போலீஸார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்துள்ளனர். குறிப்பாக, வாகன திருட்டு, மிகவும் மோசமாக வாகனத்தை இயக்கியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டது என பல பிரிவுகள் அவர் மீது பாய்ந்துள்ளது.

ஜாய் கிராட்னி, அவரது செல்போனில் எடுத்து புகைப்படம் மற்றும் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதைதான் சிபிஎஸ்17 மற்றும் ஏபிசி 11 ஆகிய அமெரிக்க செய்தி தளங்கள் அவர்களின் சேனல்களில் ஒளிப்பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் பள்ளி பேருந்து கடுமையாக சேதமடைந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.
சிறுவனின் செயல் பிரபல ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸின் திரைப்படத்தில் வரும் அதிரடி காட்சிகளைப் போல் அமைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, போலீஸார் பேருந்தை விரட்டியதும், சிறுவன் பேருந்தை தலை கால் புரியாமல் இயக்கியதும் திரைப்பட ஷூட்டிங்கைப் போல் இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், பேருந்து மரத்தில் மோதிய பின்னர் அந்த நிகழ்வு அனைத்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது.