பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

இந்தியாவிற்கே முன்னோடியாக கர்நாடகா உருவெடுத்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

பெட்ரோல் மற்றும் டீசல் தேவைக்காக இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கு மத்திய அரசு விரும்புகிறது. தற்போதைய நிலையில் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலம்தான் பூர்த்தி செய்து கொள்கிறது. இதனால் பொருளாதார ரீதியிலான பாதிப்புகள் ஏற்படுவதால்தான், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும். எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார். இதுதவிர மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

இதில், கர்நாடகா முதன்மையான இடத்தில் உள்ளது. தொழில்நுட்பத்தில் தலைசிறந்த விளங்கும் மாநிலமான கர்நாடகா, எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதிலும் தீவிரம் காட்டுகிறது. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறையால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

இந்த குறையை போக்குவதற்காக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு தற்போது சூப்பர் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அம்மாநில தலைநகரான பெங்களூரில் தற்போது 112 சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

இது தொடர்பாக பெஸ்காம் (Bescom - Bengaluru Electricity Supply Company Ltd) அதிகாரிகள் கூறுகையில், ''இந்த 112 சார்ஜிங் ஸ்டேஷன்களில், 12 டிசி (DC - Direct Current) ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட்கள் ஆகும். எஞ்சிய நூறும், ஏசி AC (Alternate Current) பாயிண்ட்கள் ஆகும். மின்சார ஸ்கூட்டர்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்காக இவை அமைக்கப்பட்டுள்ளன'' என்றனர்.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

பெஸ்காம் அலுவலங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகள், பெங்களூர் மேம்பாட்டு ஆணைய வளாகங்கள், மைசூர் சாலையில் உள்ள கேஎஸ்ஆர்டிசி டெர்மினல்கள் மற்றும் ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பெங்களூர் மாநகர மக்கள் இந்நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், பெங்களூர் நகரில் வெறும் 12 ஆயிரம் மின்சார வாகனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையோ 70 லட்சம். ஆனால் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க ஆகும் செலவை விட, எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவுதான். இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் மின்சார வாகன பயன்பாட்டாளர்களுக்கு உதவி செய்வதுடன், அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

குறிப்பாக பெங்களூர் நகரில் காற்று மாசுபாட்டை குறைப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும்'' என்றனர். ஆனால் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஏசி ஸ்லோ சார்ஜிங்கிற்கான கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 7.30 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

அதே சமயம் டிசி சார்ஜிங்கிற்கான கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 7.42 ரூபாய் எனவும், ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான கட்டணம் 7.99 ரூபாய் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாததால்தான், பெட்ரோல், டீசல் வாகனங்களையே பலர் வாங்குகின்றனர்.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

நமது ஊரில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரும் அளவில் இல்லையே என்று ஏங்குபவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் தற்போது பெங்களூர் மக்களுக்கு அடித்துள்ளது. கர்நாடக மாநில அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக வரும் காலங்களில் பெங்களூர் நகரில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர்காரங்க குடுத்து வெச்சவங்க... இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கர்நாடகா... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விஷயத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக கர்நாடகா திகழ்ந்து வருகிறது என்று சொன்னால் மிகையல்ல. கர்நாடகா மட்டுமல்லாது கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
112 EV Charging Stations Set Up In Bangalore. Read in Tamil
Story first published: Sunday, July 19, 2020, 0:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X