இணையவாசிகளை திக்கு முக்காட செய்த ஏலம்... 17 ஆண்டுகள் பழைய காருக்கு இத்தனை கோடியா... ஆச்சரியம்!

சந்தை விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக தொகைக்கு 17 ஆண்டு கால பழைய கார் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

முகப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், ஒரு சில வாகன ஆர்வலர்கள் மத்தியில் 'அட ச்சே இந்த சான்ஸ மிஸ் பண்ணிட்டோமே' என்ற எண்ணம்தான் தோன்றியிருக்கும். அம்மாதிரியான ஓர் தகவல்தான் தற்போது இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது. அது, ஃபெர்ராரி என்ஸோ (Ferrari Enzo) காரை ஏலத்தில் விற்கப்பட்டதைப் பற்றியதாகும்.

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

சூப்பர் கார் தயாரிப்பில் உலகப்புகழ் பெற்ற நிறுவனமாக இருந்து வருகின்றது ஃபெர்ராரி. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வாகன பிரியர்கள் மத்தியில் எப்போதும் அமோகமான வரவேற்பு உண்டு. அதிலும், சூப்பர் கார் விரும்பிகளின் மத்தியில் அந்த வரவேற்பு சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது. ஏன், அவர்களில் பலருடைய கனவு வாகனமாகவே அவை இருந்து வருகின்றன.

MOST READ: பிஎஸ்6 எஞ்சின் மற்றும் புதிய பொலிவில் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

எனவேதான் நாம் நம்ப முடியாத ஒரு சில தகவல்கள் ஃபெர்ராரி தயாரிப்பை சுற்றி வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான தகவலாகவே தற்போதைய ஏல சம்பவம் இருக்கின்றது. இந்த சம்பவத்தில், 2003 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஃபெர்ராரி என்ஸோ கார் ரூ. 20 கோடிக்கு ஏலம் விடப்பட்டிருக்கின்றது. இது, ஃபெர்ராரி ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

ஆம், இந்த தொகையானது புதிதாக விற்கப்பட்ட ஃபெர்ராரி என்ஸோ காரின் விலையை விட நான்கு மடங்கும் அதிகம் ஆகும். இதுதான் பலர் வியப்படையக் காரணமாக உள்ளது.

இந்த ஏல சம்பவம் இந்தியாவில் நடைபெற்றது அல்ல என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல் ஆகும். இது இத்தாலியின் மரநெல்லோ (Maranello) என்னும் பகுதியில் அரங்கேறியிருக்கின்றது.

MOST READ: டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

இந்த ஏலத்தை, பழைய வாகனங்களை ஏலம் விடுவதற்காக இயங்கி வரும் ஆர் எம் சொதெப்பி (RM Sotheby's) நிறுவனமே மேற்கொண்டுள்ளது. இது, கனடா, அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே செய்து வருகின்றது. ஆனால், இது ஒன்டாரியாவோ (Ontario) என்னும் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனம் ஆகும்.

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

இது உலகின் பல்வேறு மூலைகளில் இருக்கும் பிரசித்தி பெற்ற வாகனங்களை தேடிக் கண்டுபிடித்து, அதனை கலெக்ட் செய்து வருகின்றது. இதுமட்டுமின்றி, இதன்மூலம் அதிக லாபத்தை ஈட்டும் விதமாக அந்த புகழ்வாய்ந்த கார்களை ஆன்-லைன் மூலம் விற்பனையும் செய்யும். குறிப்பாக, ஏலத்தின்மூலம் விற்பனைச் செய்து வருகின்றது. அம்மாதிரியான ஓர் ஏலத்தில்தான் 2003ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஃபெர்ராரி என்ஸோ கார் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 2.64 மில்லியனுக்கு விற்பனையாகியுள்ளது.

MOST READ: வெறும் 250 ரூபாயில் கார்களில் கிருமிநீக்கம் செய்து தரும் விண்ட்ஷீல்டு எக்ஸ்பர்ட்ஸ்!

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

அது இந்திய மதிப்பில் ரூ. 20 கோடி ஆகும். இந்த கார் 13303 என்ற சேஸிஸ் எண்ணைக் கொண்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 1,250 கிமீ தூரம் வரை மட்டுமே பயணித்துள்ளது.

ஃபெர்ராரி நிறுவனம் இந்த என்ஸோ மாடலிலான காரை 2002 ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மட்டுமே உற்பத்தி செய்தது. அப்போது 400 யூனிட் என்ஸோ கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதனாலயே, சூப்பர் கார்கள் விரும்புகளின் கனவு வாகனமாக இது உள்ளது.

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

இரு டூர்கள் வசதியைக் கொண்ட இந்த கார் ஓர் மிட் எஞ்ஜின் கொண்ட மாடலாகும். இதுமட்டுமின்றி என்ஸோ ஓர் ரியர் வீல் இயக்கம் கொண்ட சூப்பர் காராகும். இதில், 651 எச்பி மற்றும் 657 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 6.0 லிட்டர் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, வெறும் 3.3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தைத் தெடுமளவிற்கு திறன் வாய்ந்தது ஆகும்.

MOST READ: இரண்டே பேர்தான், ஆனா திருடியது 18 கார்கள்! அத்தனையும் விலையுயர்ந்த எஸ்யூவி கார்கள்...

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

ஆர் சொதெப்பி நிறுவனம் இதுபோன்ற பழமை வாய்ந்த கார்களை ஏலம் விடுவது முதல் முறையல்ல. ஆனால், ஆன்-லைன் ஏலத்தில் மிக உச்சபட்ச விலையில் கார் விற்பனைக்குப் போவது இதுவே முதல் முறையாகும்.

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

முன்னதாக, இந்த ஏலம் விடும் நிறுவனம், 399 யூனிட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்ட மற்றுமொரு ஃபெர்ராரி காரைகூட ஏலத்தில் விற்றிருந்தது. அந்த கார் போப் ஜான் பால் II, அவர்களுக்கு கிஃப்டாக வழங்கப்பட்ட காராகும்.

நம்ப முடியாத விலைக்கு ஏலம்போன 17 ஆண்டுகள் பழைய கார்! ஆன்-லைன் ஏலத்திலேயே இதுதான் முதல் முறை... எவ்வளவு தெரியுமா?

அது ரூ. 55 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இந்த சம்பவம் 2015ம் அரங்கேறியதாகும். இதுபோன்று பல கார்களை அதிக விலையில் அந்நிறுவனம் ஏலம் விட்டுள்ளது. அவையனைத்தும் வாங்கப்பட்ட விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையிலேயே விற்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
17 Years Old Ferrari Enzo Auctioned For Rs. 20 Crore. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X