19 நாளே ஆன புதிய எம்ஜி ஹெக்டர்.. நடுரோட்டில் தீ பிடித்து நாசம்.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

மணிக்கு ஒரு முறை முட்டாள் அமைச்சர் என்பதை நிரூபித்திக் கொண்டிருக்கிறீர்கள் என வடிவேலு காமெடியில் கூறுவதைப் போன்று எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் அவ்வப்போது 'மேட் இன் சைனா' என்பதை நிரூபிக்கும் வகையில் பிரச்னைகளை வழங்கி வருகின்றது. ஆனால், தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு டுவிஸ்ட் இருக்கு. அது என்ன என்பதை கீழே காணலாம்.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்ததையடுத்து முதல் காராக ஹெக்டர் எஸ்யூவி ரக மாடலை அறிமுகம் செய்தது. இந்நிறுவனம், இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கினாலும், அது ஓர் சீனரின் தயாரிப்பாகும்.

ஏனென்றால், இது சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. செயிக் குழுமத்தால், சீனாவில் தயாரிக்கப்பட்ட பவ்ஜுன் 530 எஸ்யூவி கார்தான் தற்போது ஒரு சில மாற்றங்களுடன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக எம்ஜி பிராண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு அறிமுகமான இந்த கார் இந்தியாவின் முதல் கனெக்டெட் என்ற சிறப்பந்தஸ்தைப் பெற்று களமிறங்கியது.

இது, இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்மூலம் நேரடி இணைய வசதியை வழங்கும். இதுமட்டுமின்றி, பயணிகளை என்டர்டெயின்மெண்ட் செய்யவும் இது உதவும்.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

தொடர்ந்து, பிரிமியம் மற்றும் லக்சூரி வசதியிலும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இது காட்சியளிக்கின்றது. இதன்காரணமாகவே யாரும் எதிர்பாராத ஓர் டிமாண்டை இந்தியர்கள் இந்த கார் பெற்று வருகின்றது. இதுமட்டுமின்றி, குறைவான விலையில் விற்பனைக்கு கிடைப்பதும் ஓர் காரணமாக உள்ளது.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

எனவே, இந்தியர்கள் இந்த காருக்கான சந்தையை சிவப்பு கம்பளம் விரித்து ஏற்படுத்திக் கொடுத்தனர். எனவே, இந்த காருக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் இமாலய அளவில் உயர தொடங்கியது.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

இவ்வாறு, நினைத்துகூட பார்க்காத இலக்கை எட்டியதால், எம்ஜி நிறுவனம் இந்த காருக்கான உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து, காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் விதமான பல்வேறு முயற்சிகளில் அது களமிறங்கியது.

இந்த சூழ்நிலையில், எம்ஜி ஹெக்டரின் புகழுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தும் விதமாக ஒரு சில சம்பவங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

அந்தவகையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் தொழில்நுட்பம் மற்றும் எஞ்ஜின் கோளாறுகள் ஏற்படுவது தொடர் கதையாகி வந்தது.

இந்நிலையில், தொடர் தீ பிடிப்பு சம்பவங்களும் அரங்கேறத் தொடங்கியுள்ளது. முன்னதாக, வாங்கிய சில நாட்களே ஆன எம்ஜி ஹெக்டர் காரின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகுவதைப் போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியது.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

இதையடுத்து, எஞ்ஜின் செயல்படாத ஹெக்டரை அதன் உரிமையாளர் கழுதையை வைத்து இழுத்து செல்லும் காட்டூத் தீயாய் பரவியது.

இதையடுத்து, தற்போது நடு ரோட்டில் வாங்கி 19 நாட்களே ஆன புத்தம் புதிய கார் ஒன்று தீ பிடித்து எரிவதைப் போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி ஹெக்டர் கார் இவ்வாறு திடீரென தீப்பிடித்து எரிவது இதுதான் முதல் முறையா..? என்றால், இல்லை.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

இதற்கு முன்பாகவும் நடு ரோட்டில் திடீரென எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம்தான் அரங்கேறியது. இது நடைபெற்று ஒரு மாதமே ஆன நிலையில் மீண்டும் ஒரு தீப்பிடிப்பு சம்பவத்தால் எம்ஜி நிறுவனத்திற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

ஏற்கனவே, இந்த கார் மீது பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பரவ ஆரம்பித்திருக்கும் வேலையில், இந்த தீ விபத்து கூடுதல் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஆனால், தற்போது ஹரியானாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், ஹெக்டரின் உரிமையாளாராலேயே நிகழ்ந்துள்ளது.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

இந்த புத்தம் புதிய ஹெக்டர் எஸ்யூவி கார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்குச் சொந்தமானதாகும்.

அவர், டீலர்கள் ஷோரூம் வாயிலாக கூடுதல் அக்ஸசெரீஸ்களை ஹெக்டரில் இணைத்துள்ளார். இதன் காரணத்தினாலேயே காரில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், எம்ஜி ஹெக்டர் காரில் எந்தவொரு கோளாறும் இல்லை என்பதையும் தெரியபடுத்தினார்.

இவற்றை கடிதம் வாயிலாக அவர் உறுதி செய்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தை நீங்கள் கீழே காணலாம்.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

மேலும், இந்த தீ விபத்தை அடுத்து எம்ஜி நிறுவனம் உடனடியாக தன்னைத் தொடர்புகொண்டு தக்க நடவடிக்கை எடுத்திருப்பதையும் அவர் அதே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். இதேபோன்ற நடவடிக்கையை, கழுதை முரண்பாட்டிலும் எம்ஜி நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

இதனால், புத்தம் புதிய ஹெக்டர் காரின் தீ விவகாரத்தில் நிலவி வந்த மாறுபட்ட கருத்துகளுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

இந்த தீ விபத்து சம்பவம்குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், காரின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து நாசமாகியது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் 'சைனா மேட்' என நிரூபித்த எம்ஜி ஹெக்டர்... நாடு ரோட்டில் தீ பிடித்த 19 நாளே ஆன புத்தம் புதிய கார்...

தற்போது தீ பற்றியிருப்பது ஹெக்டரின் பிஇ 1.5 டிசிடி ஷார்ப் வேரியண்ட். இது இந்த பிராண்டின் உயர்நிலை வேரியண்ட் ஆகும்.

ரூ. 13.48 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த கார் அதிகபட்சமாக 17.18 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

எம்ஜி நிறுவனத்தின் இந்த ஹெக்டர் ஜம்பவான் நிறுவனத்தின் தயாரிப்பான டாடா ஹாரியருக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகின்றது. இதுமட்டுமின்றி, ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுக்கும் கடும் நெரக்கடியை எம்ஜி ஹெக்டர் கொடுத்து வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
19 Days Old MG Hector Gets Fire In Haryana. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X