35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

எஸ்எஸ்80 என்கிற பெயரில் மாருதி நிறுவனத்தில் இருந்து 1984ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 800 மாடலின் முதல் தலைமுறை கார் தற்போதைய லேட்டஸ்ட் கார்களுக்கு இணையாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியினை இனி விரிவாக பார்ப்போம்.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

மாருதி 800 மாடலில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கஸ்டமைஸ்ட் மாற்றங்கள் அனைத்தையும் டெல்லியை சேர்ந்த ஏஜிஎம் டெக்னாலிஜிஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த பழமையான கார் தற்போதைய லேட்டஸ்ட் மாடல்களுக்கு இணையாக மாற்றியமைக்கப்பட்டாலும் இதன் பழமை மாறவே இல்லை.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

இந்த 800 மாடலின் வெளிப்புற சிவப்பு நிற பெயிண்ட் அமைப்பு, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டெயில்லைட்டுகள் உள்ளிட்டவற்றில் மாடர்ன் தொடுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒரிஜினல் மாருதி 800-ல் 12 இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கஸ்டமைஸ்ட் காரில் 13 இன்ச்சில் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

கார்பன்-ஃபைபர் பம்பர் மற்றும் பக்கவாட்டு பேனல்களின் டிசைன்களில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் அவை பழைய 800 மாடலில் உள்ளது போல் பளப்பளப்பாக இந்த காரில் இல்லை. சுசுகி பேட்ஜ் உடன் உள்ள கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு காரின் வெளிப்புறத்திற்கு புதுமையான தோற்றத்தை தருகிறது.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

கார்பன்-ஃபைபர் டச் காரின் உட்புறத்திலும் சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. டேஸ்போர்டு பழைய டிசைனை பெற்றிருந்தாலும் ஏசி, மியூசிக் சிஸ்டம், தனித்து இருக்கும் சுழற்சி அளவுமானி மற்றும் ஆம்பியர்-லிட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்றவை கூடுதலாக இந்த புதிய கஸ்டமைஸ்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

காரின் ஸ்டேரிங் சக்கரத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இருக்கைகள் காரின் ரூஃப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள அதே லெதரால் மூடப்பட்டுள்ளன. காரின் பின்புற கண்ணாடி மூலமாக பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள காலி இடத்தில் தேவையான பொருட்களை வைக்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

இந்த காரில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயங்களாக முன்புற டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்ஸ் போன்றவை புதியதாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. காஸ்மெட்டிக் மாற்றங்களை விட இயந்திர பாகங்களில் பல அப்டேட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரிஜினல் 800 மாடலின் 796சிசி என்ஜின் தான் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

இருப்பினும் காரின் கார்புரேட்டார், எம்பிஎஃப்ஐ சிஸ்டத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் எஸ்எஸ்80-ஐ விட பழமையான மாடலான ருனாபோட்டில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ள மாருதி கார் வெளியிடும் ஆற்றல் அளவுகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

இருப்பினும் இந்த எம்பிஎஃப்ஐ வெர்சனுக்கு மாற்றப்பட்ட கார், கார்புரேட்டட் வெர்சனில் வெளிப்படுத்திய 35 பிஎச்பி ஆற்றலை விட அதிகமாக 45 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகளவில் இந்த காரில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இந்த கார் ரூ.6 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1984ல் மாருதி 800 மாடலின் முதல் தலைமுறை கார் ரூ.52,500-ல் விற்பனை செய்யப்பட்டது.

35 வருடங்களுக்கு பிறகு புதிய வடிவை பெற்றிருக்கும் மாருதியின் முதல் 800 மாடல் கார்...

மாருதியின் இந்த முதல் தலைமுறை 800 மாடல் கார், ஒரு காரையாவது வாங்கிவிட மாட்டோமா என காத்திருந்த மிடில் கிளாஸ் குடும்பத்தாருக்கு மிக பெரிய நம்பிக்கையை கொடுத்த மாடலாகும். இதனால் இந்த ஹேட்ச்பேக் மாடலுக்கு இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் எப்போதுமே நீங்காத ஓர் இடம் உண்டு. இந்த பழமையான மாடல் காரின் தயாரிப்பை மாருதி நிறுவனம் 2014ல் நிறுத்தியது நினைவுக்கூரத்தக்கது.

Image Courtesy: Turbo Xtreme/YouTube

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2020, 17:37 [IST]
English summary
1984 Maruti 800 first gen modified – New tyres, LEDs, Red paint, etc
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+