வல்லரசுகள் தயங்கும் செயலை துணிவுடன் நிகழ்த்த பாங்காக் முடிவு..! இதுக்கு எல்லாம் தனி தைரியம் வேணுங்க!
உலக நாடுகள் தயங்கும் செயலை தாய்லாந்து அரசு துணிவுடன் செய்ய முடிவு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

உலக நாடுகள் அனைத்தும் ஒற்றை உயிர் கொல்லி வைரசான கொரோனாவைக் கண்டு நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கொரோனா வைரஸ் பரவல் முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது மிக தீவிரமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால், பல புது முக வாகனங்களின் அத்தியாயம் தொடங்கப்படுவதற்கு முன்னரே முடங்கிக் கிடக்கின்றது.

இவ்வாறு ஒட்டுமொத்த துறையுமே அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆரம்ப புள்ளி வைப்பதற்கு முன்னரே தற்காலிக முற்று புள்ளியை வைக்கத் தொடங்கியிருக்கின்றன. ஏன், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சில போட்டிகள் கூட தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, உலகமே ஒற்றை வைரசைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பாங்காக் மோட்டார் ஷோவை நடத்தவிருப்பதாக அந்நிகழ்வின் முக்கிய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
முன்னதாக, பல்வேறு மோட்டார் ஷோக்கள் வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதில் பிரபல மிலான் வாகன கண்காட்சியும் அடங்கும்.

இந்த நிலையில்தான் பாங்காக் மோட்டார் ஷோ நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூலை 15 முதல் 26 வரை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகையால், நாளை முதல் பாங்காக் மோட்டார் ஷோ நடைபெறும் என்பது தெரியவந்துள்ளது. இது 41 வது பாங்காக் மோட்டார் ஷோ ஆகும். இதனை கிராண்ட் பிரிக்ஸ் சர்வதேச பொது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. இந்த அமைப்புதான் நடப்பாண்டிற்கான மோட்டார் ஷோவையும் ஒருங்கிணைக்க இருக்கின்றது.

தற்போது தாய்லாந்து நாட்டில் வைரஸ் பாதிப்பு படி படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாகவே, பாங்காக்கில் ஆட்டோ ஷோவை நடத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக மவுங் தோங் தானி எனும் இடத்தில் உள்ள சேலஞ்ஜர் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குதான் சர்வதேச மோட்டார் ஷே நாளை தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றது.

இந்த வாகன கண்காட்சி ஓர் சர்வதேச மோட்டார் ஷோ என்பதால் உலக நாடுகளில் இயங்கும் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதில் கலந்துக் கொள்வது வழக்கம். எனவேதான் இந்த வாகன கண்காட்சியை சில வெளிநாட்டவர்கள்கூட தவறாமல் பங்கேற்று வருகின்றனர். ஆனால், இம்முறை வெளிநாட்டவர்கள் பங்கேற்க முடியுமா என்பது தெரியவில்லை.

2020 பேங்காக் மோட்டார் ஷோவில் பங்கேற்கும் நிறுவனங்கள்:
மோட்டார் ஷோவை ஒருங்கிணைக்கும் குழு வெளியிட்ட தகவலின்படி, ஃபோர்டு, சுசுகி, பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், ஆஸ்டன் மார்ட்டின், மசராட்டி, நிஸ்ஸான், ஹோண்டா, டொயோட்டா, ஆடி, லெக்ஸஸ், போர்ஷே, ஜாகுவார் லேண்ட் ரோவர், வால்வோ, கியா, லம்போர்கினி, கேடிஎம் உள்ளிட்ட நிறுவனம் பங்கேற்க இருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கூறியவற்றுடன் இந்திய நிறுவனங்களான ராயல் என்ஃபீல்ட் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களும் பங்கேற்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த மோட்டார் காண்காட்சியில் முன்பெப்போதும் இல்லாத வகையில் அதிக பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்க இருக்கின்றது.

அதாவது, பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் நோய் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்கானித்த பின்னரே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். தொடர்ந்து, மாஸ்க் அணிவது மற்றும் கையுறைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஒவ்வொரு முறையும் அடுத்தடுத்த வாகனங்களை பார்க்கச் செல்வதற்கு முன்பு பார்வையாளர்களின் கைகள் கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட இருக்கின்றது.

மேலும், முன்பைப் போன்று அல்லாமல் குறைந்த பார்வையாளர்களே இம்முறை அனுமதிக்கப்பட இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு இடையே 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். எனவே, கூட்டம் கூட்டமாக சுத்துவது தடைச் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அதிக இடைவெளிக் கொண்ட 5 ஆயிரம் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








