டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ரெடிகோ காரின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. இந்த காரில் இடம்பெற இருக்கும் புதிய அம்சங்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

மிக குறைவான பட்ஜெட் கார் மார்க்கெட்டில் டட்சன் ரெடிகோ கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. வித்தியாசமான தோற்றம், அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் போன்றவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக வாடிக்கையாளர்களின் பார்வையில் உள்ளது. இந்த நிலையில், 2020ம் ஆண்டு மாடலாக புதிய டட்சன் ரெடிகோ கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

இந்த காரின் டீசர் சில தினங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த விபரக் குறிப்பு கையேடு காடிவாடி தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது.

 டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

இந்த காரின் டீசரில் முக்கிய விஷயமாக L வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் அனைவரையும் கவர்வதாக இருந்தது. மேலும், எல்இடி பனி விளக்குகள், புதிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் இந்த கார் வர இருக்கிறது. டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய பொலிவுடன் வர இருக்கிறது.

 டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

டட்சன் ரெடிகோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முக்கிய அம்சமாக 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும். இரட்டை வண்ண இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பும், உட்புறத்திலிருந்து அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் சைடு மிரர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சென்சார்கள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

 டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

குறிப்பாக, உட்புறம் மிகவும் பிரிமீயம் கார் போல மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் டேஷ்போர்டு அமைப்பிலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் வசீகரிக்கிறது. இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். அதேபோன்று, புளூடூத், வாய்ஸ் ரெகக்னிஷன் வசதிகளும் உள்ளன.

 டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

புதிய ரெடிகோ காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வர இருக்கிறது.

 டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்தது

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட், சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்த வாரத்தில் இந்த கார் சந்தைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி ஆல்ட்டோ, ரெனோ க்விட் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 1, 2020, 16:30 [IST]
English summary
Datsun Redigo Facelift brochure images have revealed online ahead of its launch in India soon.
மேலும்... #டட்சன் #datsun
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+