சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

2020 ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார்களை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 வருகிற அக்டோபர் 28ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. மாருதி பலேனோவிற்கு போட்டியாக வரும் ஐ20-ன் புதிய தலைமுறை கார் விரைவில் அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

இதற்காக சில டீலர்கள் புதிய ஐ20-ஐ ஆர்டர் செய்ய ஆரம்பித்துள்ளனர். சில டீலர்கள் காட்சிப்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ட்ரைவ்-விற்காகவும் 2020 ஐ20-ன் முதல் தொகுப்பை பெறவும் ஆரம்பித்துவிட்டனர். கார் பைக் ரிவியூஸ் என்ற செய்திதளத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

மேலும் புதிய ஹூண்டாய் ஐ20 வெளிபுறம் மற்றும் உட்புறத்தில் தடிமனான மற்றும் கூர்மையான லைன்களை பிராண்டின் லேட்டஸ்ட் டிசைன் மொழியின் மூலம் பெற்றுள்ளதையும் இந்த ஸ்பை படங்கள் உறுதிப்படுத்துகின்றன. காரின் முன்புறம் அறுகோண க்ரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் உடன் சற்று தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

அதேபோல் காரின் பின்புறம் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் கருப்பு நிறத்தில் டிஃப்யூஸரை கொண்டுள்ளது. உட்புற கேபின் முன்பை விட புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிப்பதை தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களின் மூலம் உங்களால் பார்க்க முடியும்.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

இதன் கேபினில் அகலமான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தாழ்வாக பொருத்தப்பட்ட ஏசி மற்றும் மாற்று ஸ்விட்ச்கள் & பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரத்துடன் மைய கன்சோல் உள்ளிட்ட அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

அதேநேரம் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இதன் டாப் வேரியண்ட்களில் வண்ண நிறத்தில் வழங்கப்படலாம். இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு பல எண்ணிக்கைகளில் காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த 2020 கார் அறிமுகமாகவுள்ளது.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

புதிய ஹூண்டாய் ஐ20 தற்போதைய 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை மீண்டும் பெற்று வரவுள்ளது. அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே வழங்கப்படவுள்ள டீசல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டாப் வேரியண்ட்களுக்கு வழக்கம்போல் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு நேரடி இன்ஜெக்‌ஷன் என்ஜின் தொடரப்படவுள்ளது.

சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்...

ஆனால் இந்த என்ஜின் உடன் டிசிடி கியர்பாக்ஸ் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படவுள்ளது. மாருதி பலேனோ மட்டுமின்றி டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினையும் காணவுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
2020 Hyundai i20 Dealer Dispatch Starts – Interiors Spied With Sunroof, Touchscreen
Story first published: Monday, October 19, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X