2020 ஹூண்டாய் ஐ20 என் காரின் தோற்றம் எவ்வாறு இருக்கும்...? வெளிச்சத்திற்கு கொண்டுவந்த படங்கள்...
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான ஐ20 என் மாடலின் டிஜிட்டல் தோற்றத்தை எக்ஸ்-டோமி டிசைன் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சமீபத்தில் சில ஸ்பை படங்கள் வெளியானதை தொடர்ந்து 2020 ஹூண்டாய் ஐ20 என் மாடல் வரும் மாதங்களில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே ஆற்றல்மிக்க ஐ20 வரிசை காராக புதிய ஐ20 என் மாடல் விளங்கவுள்ளது.

இந்த ஹூண்டாய் மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இதே என்ஜின் கியா ஸீட் ஜிடி மாடலில் 265 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது.

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ஐ20 என் மாடலில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இரு ட்ரைவிங் மோட்களுடன் இணைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தான் எக்ஸ்-டோமி இணையத்தளம் ஹூண்டாய் ஐ20 என் மாடலின் தயாரிப்பு வெர்சனின் தோற்றத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட்டுள்ளது.

இது அந்த இணையத்தளத்தின் கற்பனை தான். இதில் கார் நீல நிற பெயிண்ட் அமைப்புடன் கருப்பு நிறத்தில் தேன்கூடு வடிவிலான க்ரில் மற்றும் மேற்கூரை உடன் காட்சியளிக்கிறது. கருப்பு நிறம் A-, B- மற்றும் C- பில்லர்களிலும் தொடர்ந்துள்ளது. இதனால் இந்த படங்களில் கார் ட்யூல்-டோனில் காட்சியளிக்கிறது.

இவை மட்டுமின்றி விங் மிரர்கள் மற்றும் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களும் கருப்பு நிற பெயிண்ட்டில் ஸ்போர்ட்டியான சிவப்பு ப்ரேக் காலிபர்களுடன் உள்ளன. லோயர் லிப் ஸ்பாய்லர் மற்றும் கூடுதலான பாடி கிட் ஹூண்டாய் ஐ20 என் மாடலை லோ ஸ்லங் சூப்பர்மினி காராக காட்டுகிறது.

ஆனால் உண்மையில் புதிய ஐ20 மாடலானது Y-வடிவில் அலாய் சக்கரங்கள், பெரிய ப்ரேக்குகள், ஒருங்கிணைப்பட்ட ரியர் ஸ்பாய்லர், ஸ்பெஷல் டிகால்ஸ் மற்றும் ட்யூல் எக்ஸாஸ்ட் அவுட்லெட்களுடன் பேட்ஜ்களை கொண்டிருக்கும்.

இவற்றுடன் ஹூண்டாய் நிறுவனம் லிமிடேட் ஸ்லிப் டிஃப், அடாப்டிவ் டேம்பர்கள், விரைப்பான சேசிஸ், உறுதியான சுருள்கள், மிகவும் ஏற்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட என்ஜின் உள்ளிட்ட இயந்திர பாகங்களால் தற்போதைய மாடலை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட டைனாமிக் பண்புடன் புதிய ஐ20 என் மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்திய சந்தைக்கு இந்நிறுவனம் முற்றிலும் புதிய எலைட் ஐ20 மாடலை கொண்டுவர உள்ளது. ஐரோப்பிய மாடலுடன் பெரும்பான்மையானவற்றில் ஒத்து வெளிவரவுள்ள புதிய எலைட் ஐ20 காரின் டிசைன் மற்றும் உட்புற கேபினை புதிய தொழிற்நுட்பங்களுடன் மிகவும் அப்கிரேட்டாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








