இப்போதைக்கு உள்ள ஆற்றல்மிக்க ஐ20 கார்... 2020 ஹூண்டாய் ஐ20 என் மாடலின் டீசர் வீடியோ இதோ...!
தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு மாடலான ஐ20 என் மாடலின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் செயல்திறன் மிக்க என் பிரிவு மாடலாக வெளியிடப்படவுள்ள இந்த புதிய காரை பற்றி இந்த செய்தியில் காண்போம்.
இந்த வீடியோ தற்போதைய ஹூண்டாய் ஐ20 மாடலின் ரேலி காரின் பக்கவாட்டு பகுதியில் ஆரம்பமாகிறது. வீடியோ முழுக்க ஸ்வீடனின் பனி நிறைந்த பகுதியில் கார் இயங்குவது போல தான் காட்டப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியில் தான் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ஐ20 என் மாடலின் விற்பனை கார் காட்டப்படுகிறது.

இந்த வீடியோவின் மூலம் இந்த 5-கதவு ஹேட்ச்பேக் மாடலில் இந்நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவின் வின்னிங் ஃபார்முலா பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதன் என் பேட்ஜ், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள நம்யங்க் பகுதியை குறிக்கிறது.

ஹூண்டாய் ஐ20 என் மாடலின் படங்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் இந்த புதிய ஹூண்டாய் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதிலிருந்து பார்க்கும்போது வழக்கமான ஐ20 மாடலில் இருந்து இந்த புதிய மாடல் கவனிக்கத்தக்க வகையில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை ஏற்றுள்ளது.

இந்த வகையில் ரீடிசைன்டு பம்பர்கள், திருத்தியமைக்கப்பட்ட முன்புற க்ரில், பெரிய சக்கரங்கள் & ப்ரேக்க்குகள் மற்றும் ட்யூல் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை அடங்கும். என்ஜின் சிறப்பாக திருத்தப்பட்டுள்ளது. இதனால் காரின் சத்தம் அட்டகாசமாக உள்ளது.

வீடியோவில் காரை இயக்கியவர் காரை ஹேண்ட்லிங் செய்வது மிகவும் எளிதாக இருப்பதாக கூறியுள்ளார். ஹூண்டாய் ஐ20 என் மாடலின் ரேலி காரையும் இவர் இதுபோன்று விரைவில் ட்ரைவ் செய்யும் வீடியோ வெளியிடப்படும் என நம்புவோம். ஆனால் அது ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 என் மாடலுக்கான விளம்பர திட்டங்களில் முக்கியமானதாக இருக்கும்.

இந்த வீடியோ வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால் விரைவில் இதே பாணியில் ஃபோர்டு ஃபியாஸ்டா எஸ்டி, ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, மினி கூப்பர் எஸ், பியூஜியோட் 208 ஜிடிஐ போன்ற மாடல்களின் டீசர் வீடியோவையும் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் ஐ20 என் மாடல் குறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த ஹேட்ச்பேக் மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இதனுடன் வழங்கப்படவுள்ள 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் ஆற்றலை காரின் முன் சக்கரத்திற்கு வழங்கவுள்ளன. இந்திய சந்தைக்கு இந்த ஹேட்ச்பேக் மாடலை அடுத்த சில வருடங்களுக்கு எதிர்பார்க்க முடியாது.

ஐ20 என் போன்று இந்நிறுவனத்தின் என் பிரிவில் ஐ30 என், ஐ30 ஃபாஸ்ட்பேக் என் வெலோஸ்டர் என் மற்றும் எலண்ட்ரா என்-லைன் போன்ற கார்களும் இணையவுள்ளன. இதில் எலண்ட்ரா என்-லைன் மாடலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








