ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் இதோ

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 2020 மோட்டார் கண்காட்சியின் மூலம் நடைபெறவுள்ள ஹூண்டாய் ஐ20 மாடலின் புதிய தலைமுறை ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த புதிய ஹேட்ச்பேக்கின் டீசர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இதன் தோற்றம் குறித்து வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

இந்த புதிய கார் கடந்த சில மாதங்களாகவே இந்தியா மட்டுமின்றி பல வெளிநாட்டு சாலைகளிலும் அவ்வப்போது சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது வெளியாகியுள்ள இதன் டீசர் புகைப்படங்களின் மூலம் இந்த புதிய மாடலில் ஸ்டைலான டிசைன் அப்டேட்கள், அட்வான்ஸான தொழிற்நுட்பம் மற்றும் புதிய என்ஜின் தொழிற்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

தற்போதைய ஐ20 மாடலும் அதன் கூர்மையான மற்றும் ஸ்போர்ட்டியான டிசைன் அமைப்பால் சந்தையில் சிறந்த வடிவமைப்பை பெற்ற மாடலாக திகழ்ந்து வருகிறது. இதனால் தற்போதைய ஐ20 மாடலின் டிசைன் அமைப்பை தான் பெரும்பான்மையாக இதன் இந்த புதிய தலைமுறை கார் பெற்றுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களில் இருந்து கூட சில டிசைன் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு இதன் பம்பர். டீசரில் காட்டப்பட்டுள்ள ஐ20 மாடலில் உள்ள ஸ்டைலான பம்பர், சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகி இருந்த அவ்ரா செடான் மாடலுடன் ஒத்து காணப்படுகிறது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

இதேபோல் ஹெட்லைட்டை தனது இரு புறங்களிலும் கொண்டுள்ள க்ரில் அமைப்பும், ஹூண்டாய் எலண்ட்ராவில் உள்ளதுபோல் தோற்றமளிக்கிறது. மொத்தமாக இந்த காருக்கு வழங்குவதற்கான டிசைன் அப்டேட்களை ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான மாடல்களில் இருந்து தேர்ந்தெடுத்துள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

ஏனெனில் மற்றப்படி இந்நிறுவனம் இந்த புதிய ஐ20 மாடலின் டிசைன் அமைப்பில் பெரிய அளவில் வேறெந்த புதிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஹூண்டாய் ஐ20 மாடல் இந்திய சந்தையில் மிக சிறப்பாக விற்பனையாகி வரும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. இது கூட ஹூண்டாய் நிறுவனத்தை ரிஸ்க் எடுக்க விடாமல் செய்திருக்கலாம்.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

டிசைன் அப்டேட்கள் மட்டுமின்றி, காரின் மொத்த பரிமாண அளவுகளிலும் கவனித்தக்க வகையில் எந்த மாற்றமும் இல்லை. உட்புறத்தில் இந்த கார் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள பாகங்களுடன் தான் தொடரவுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

தற்போதைய மாடலின் உட்புறத்தில் 8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐஎக்ஸ்25 மாடலில் உள்ளதை போன்ற முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை உள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான அப்டேட்டாக, பல கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் பொருத்தப்பட்டிருப்பது பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி இந்த 2020 ஹேட்ச்பேக் மாடலில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், பின்புற ஏசி வெண்ட்ஸ், காரை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்வதற்கு பொத்தான் மற்றும் முன்புற, பின்புற ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

ஐ20 மாடலின் இந்த புதிய இரண்டாம் தலைமுறை கார் ப்ளூலிங்க் இணைப்பு தொழிற்நுட்பத்தையும் பெற்றுள்ளது. இந்த இணைப்பு தொழிற்நுட்பத்தின் மூலம் வாகனத்தை ஸ்மார்ட்போனில் இருந்து கண்காணித்தல், ஆட்டோமேட்டிக் க்ராஷ் டெஸ்ட்டிங், வாகனத்தின் நிலைப்பாட்டை அறிதல், ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் லாக்/அன்லாக் உள்ளிட்டவற்றிற்காக ரிமோட் மற்றும் வாகன இம்பொளிசர் உள்ளிட்ட ஸ்மார்ட் வசதிகளை பெற முடியும்.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

இந்த காரின் என்ஜின் தேர்வுகளுள் ஒன்றாக உள்ள பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மற்றொரு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஏற்கனவே வென்யூ மாடலில் வழங்கப்பட்டிருந்தது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

இந்த புதிய ஹேட்ச்பேக் மாடலின் டீசல் வேரியண்ட்டிற்கு 1.5 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 90 பிஎச்பி வரையில் ஆற்றலை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும். இந்த டீசல் என்ஜின் கியா செல்டோஸ் மாடலில் உள்ள 1.5 லிட்டர் என்ஜினின் மறு உருவாக்கம் ஆகும்.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா...? புதிய டீசர் வெளியீடு

இந்திய சந்தையில் வருகிற ஜூன் மாதம் முதல் ஹூண்டாய் ஐ20 மாடலின் இந்த புதிய தலைமுறை கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் இதற்கு போட்டி கொடுக்க, மாருதி சுசுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்கள் தயாராக உள்ளன.

Most Read Articles
English summary
2020 Hyundai i20 Next Gen teaser pictures
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X