அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் 2020 ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார்... புதிய டீசர் வெளியீடு...
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தற்போது இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த சில மாதங்களுக்கு முன்பே சந்தையில் அறிமுகமாக இருந்தது. ஆனால் கொரோனா இதன் வருகையை தாமதப்படுத்தவே வரும் ஜூலை 14ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.

அறிமுகமானதை தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய ஷோரூம்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டக்ஸன் மாடல் மட்டுமின்றி ஹூண்டாய் ப்ராண்ட்டின் ‘தி நெக்ஸ்ட் டைமன்ஷன்' திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய க்ரெட்டா மற்றும் வெர்னா மாடல்களும் டிஜிட்டல் முறையில் உலகளவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ் எஸ் கிம் கூறுகையில், அட்வான்ஸான தொழிற்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றின் மூலமாக நேர்த்தியான பயண அனுபவத்தை வழங்குவதும், அவற்றை கண்டுப்பிடிப்பதும் தான் ஹூண்டாய் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
'தி நெக்ஸ்ட் டைமன்ஷன்' மூலம், அனைத்து பங்குதாரர்களுக்கும் டிஜிட்டல் இடத்தில் பல கலாச்சார, மனித மைய மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவங்களை நிர்வகிக்க உத்தேசித்துள்ளோம். 'தி நெக்ஸ்ட் டைமன்ஷன்' இந்திய ஆட்டோமொபைல் துறையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மெய்நிகர் அனுபவத்தை முன்னெடுத்து ஒரு புதிய அளவுகோலை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்என கூறினார்.

ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் சந்தைக்கு வரும் டக்ஸன் எஸ்யூவி காரானது ஜிஎல் மற்றும் ஜிஎல்எஸ் என்ற இரு விதமான ட்ரிம்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் வெளிப்புறம் புதிய அடுக்கு வடிவிலான க்ரில், முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், திருத்தியமைக்கப்பட்ட முன் & பின் பம்பர்கள், 18 இன்ச் அலாய் சக்கரங்கள், மழை ஆரம்பிப்பதை உணர்த்து செயல்படும் வைபர்கள், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் கருப்பு நிறத்தில் பி-பில்லரை கொண்டுள்ளது.

உட்புறத்தில் ப்ரீமியம் தரத்திலான இருக்கை அமைப்பு, ஆறு காற்றுப்பைகள், பனோராமிக் சன்ரூஃப், 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹூண்டாயின் ப்ளூ லிங் இணைப்பு தொழிற்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 192 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

டீசல் என்ஜின் 182 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்கக்கூடியது. இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு இந்த எஸ்யூவி காருக்கு வழங்கப்பட போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








