புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் கசிவு..

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் தென் கொரியாவில் மிகவும் நெருக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இதன் புகைப்படங்களின் மூலம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கார் வெளிப்புறத்தில் சில மாற்றங்களை பெற்று வரவுள்ளது தெரிய வருகிறது.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

சீன சந்தையில் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெர்னா மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அறிமுகமாகியிருந்தது. ஆனால் அதன் டிசைன் அமைப்பில் இருந்து இந்திய விற்பனை மாடல் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும்.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தோற்றத்தை தான் ரஷ்யாவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள வெர்னா ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலும் பெற்றுள்ளது.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

இதனை தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஏனெனில் சமீபத்தில் வெளியாகியிருந்த ரஷ்யா சந்தைக்கான வெர்னா ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புற டிசைனும், இந்த சோதனை காரின் புகைப்படங்களில் உள்ள முன்புற அமைப்பும் அதிகளவில் ஒத்துப்போகின்றன.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

மேலும் இந்த புகைப்படங்களில் க்ரில் அமைப்பில் V-வடிவிலான டிசைன் கொடுக்கப்பட்டிருப்பதும் புலப்படுகிறது. புகைப்படங்கள் மிக நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளதால், அதே டிசைனில் புதிய அலாய் சக்கரங்கள் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் பொருத்தப்பட்டிருப்பதும் நமக்கு தெரிய வருகிறது.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

கூர்மையான முன்புறத்துடன் காட்சியளிக்கின்ற இந்த காரில் முழுவதும் எல்இடி தரத்தில் ஹெட்லைட்ஸ் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல் ஃபாக் விளக்குகள் பொருத்தக்கூடிய குழிகளுடன் இரு முனைகளிலும் கருப்பு நிறத்தை கொண்ட பம்பர் மற்றும் ரீ-டிசைனில் ஏர் இண்டேக் உள்ளிட்டவற்றையும் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கலாம்.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

பின்புறத்தில் இந்த புதிய மாடல் ஸ்போர்டியான எல்இடி டெயில் லைட்களையும் ஃபாக்ஸ் டிஃப்யூசருடன் புதிய டிசைனில் பம்பரையும் கொண்டுள்ளது. உட்புறம் தற்போதைய வெர்னா மாடலில் இருந்து பெரிய அளவில் மாற்றம் அடையவில்லை.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

உட்புறத்தில் மிக பெரிய அப்டேட்டாக புதிய ஃப்லோட்டிங் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் பெறும் என தெரிகிறது. சீனாவில் விற்பனை செய்யப்பட்டுவரும் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரில் மிகவும் துல்லியமான தகவல்களை வழங்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

இதனை இந்திய விற்பனை மாடலில் எதிர்பார்க்க முடியாது. உட்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மற்ற முக்கியமான அப்டேட்களாக புதிய தோற்றத்தில் ஏசி மற்றும் அதை சரியான அளவில் வைப்பதற்கு சில்வர் ட்ரிம் உள்ளிட்டவை உள்ளன.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

இயந்திர பாகங்களை பொறுத்துவரை, 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் 115 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இதே அளவை வழங்கக்கூடிய டீசல் என்ஜினை பெறுவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படவுள்ளது. இதனுடன் பெட்ரோல் என்ஜிற்கு கூடுதலாக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் என்ஜினிற்கு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கூடுதல் தேர்வாக கொடுக்கப்படவுள்ளன.

புதிய க்ரில் உடன் களத்தில் இறங்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... சோதனை புகைப்படங்கள் வெளியானது...

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தையில் இந்த 2020ஆம் வருடத்தின் மத்தியில் மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா எக்ஸ்ஷோரூமில் ரூ.8.18 லட்சத்தில் இருந்து ரூ.14.09 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Instagram

Most Read Articles
English summary
2020 Hyundai Verna Facelift spy pictures
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X