டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் பிஎஸ்6 அப்டேட்டால் வெளிப்புறத்தில் சில இடங்களில் டிசைன் மாற்றங்களை பெற்றுள்ளது. இதனால் பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் என அழைக்கப்படும் பொலிரோ பிஎஸ்6 மாடல் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களுக்கும் சென்றடைந்துள்ளது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

மேலும் இந்த பிஎஸ்6 மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் பொலிரோ பிஎஸ்4 மாடலே ரூ.7.61 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

2020 பலேரோ காரானது வெளிப்புற ஷீட் மெட்டலில் எந்த மாற்றத்தை பெறவில்லை என்றாலும் காரின் முன்புற பகுதியின் டிசைன் சிறிது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப் உடன் ப்ரீமியம் தோற்றத்தில் கருப்பு நிறத்தில் க்ரில் பகுதியை இந்த புதிய பிஎஸ்6 மாடல் பெற்றுள்ளது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

வட்ட வடிவிலான ஃபாக் விளக்குகளுடன் புதிய டிசைனில் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் கருப்பு நிறத்தில் ஃபினிஷிங் செய்யப்பட்ட பக்கவாட்டு ரப்-ஸ்ட்ரீப்ஸ் மற்றும் ஃபுட்போர்டு உள்ளிட்டவற்றையும் புதிய பொலிரோ கார் கொண்டுள்ளது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

பின்புறத்தில் புதிய கதவு கைப்பிடி, மஹிந்திரா மற்றும் பொலிரோ ப்ராண்டிங்கில் ஸ்பேர் சக்கர கவர்ஸ் மற்றும் தெளிவான லென்ஸ்களுடன் டெயில்லைட்ஸ் உள்ளிட்டவை உள்ளன. உட்புறத்தில் கவனிக்கத்தக்க வகையில் ஏகப்பட்ட அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

காரின் உள்ளே உள்ள ஸ்டேரிங் சக்கரம் மஹிந்திரா டியூவி300 மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது. டேஸ்போர்டு பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏசி வெண்ட்ஸை சுற்றிலும் மைய கன்சோலிலும் பளபளப்பான டார்க் பழுப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

இவற்றுடன் பொலிரோ மாடலில் வழக்கமாக காணப்படும் ப்ளூடூத் உடன் உள்ள அடிப்படை கென்வுட் ஆடியோ ப்ளேயர், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் கனெக்ட்டிவிட்டி போன்ற தொழிற்நுட்பங்கள் தொடர்ந்துள்ளன. பவர் விண்டோவிற்கான ஸ்விட்ச் எப்போதும்போல் முன்புற இருக்கைகளுக்கு மத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

ஏசி, மேனுவல் யூனிட் ஆகும். ட்யூல்-டோனில் இருக்கைகளை பெற்றுள்ள 2020 மஹிந்திரா பொலிரோ மாடல் சன்ரூஃப் லைனிங்கை கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது. மற்றப்படி இருக்கை அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

இயக்க ஆற்றலுக்காக 2020 பொலிரோ கார் 1.5 லிட்டர் எம்ஹாவ்க்டி70 டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்தில் கொண்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனினும், நமக்கு தெரிந்தவரை இந்த என்ஜின் வழக்கமான 70 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

இந்த என்ஜினுடன் இணைக்கப்படவுள்ள 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆற்றலை காரின் பின்புற சக்கரங்களுக்கு வழங்கும். இந்த என்ஜின் அமைப்புடன் மைக்ரோ-ஹைப்ரீட் (ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம்) பேக்கேஜின் ஒரு பகுதியாக வழங்கப்படவுள்ளது.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

மேலும் பொலிரோ பிஎஸ்6 மாடலின் அனைத்து வேரியண்ட்களும் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கை, பின்புற பார்க்கிங் சென்சார்ஸ், முன்புற பயணிகள் சீட் பெல்ட் அணியாததையும், அதிவேகத்தையும் எச்சரிக்கும் வசதி போன்ற வசதிகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டீலர்களிடம் சென்றடைந்தது 2020 மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6... ஷோரூம் விலை எவ்வளவு..?

இந்த மாடலின் டாப் வேரியண்ட் கூடுதலாக கீலெஸ் எண்ட்ரீ, ரியர் வைபர், செண்டர்-லாக்கிங், ஹப்கேப்ஸ் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. தொலைத்தூர போக்குவரத்திற்கு வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையோரின் சாய்ஸாக இருக்கும் பொலிரோ மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள டிசைன் அப்டேட்களும், பிஎஸ்6 என்ஜினும் அதன் விற்பனையை உயர்த்தும் என்பது உறுதி.

Image Courtesy: gyani enough/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, March 20, 2020, 10:24 [IST]
English summary
2020 Mahindra Bolero BS6 facelift reaches dealerships – Video
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+