மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

விரைவில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் மீண்டும் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இதன் சோதனை ஓட்ட புகைப்படங்களில் இந்த 2020 தார் மாடல் ஓரளவு மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது தெரிய வருகிறது.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

தற்போதைய தார் மாடலை விட சில வெளிப்புற டிசைன் மாற்றங்களுடன் காணப்படுகின்ற இந்த 2020 பிஎஸ்6 கார், தற்போதைய மாடலை விட அளவிலும் பெரியதாக தெரிகிறது. இதனால் சாலையை அதிகமாக ஆக்கிரமித்து செல்லும்.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

முன்னதாக வெளியாகி இருந்த இந்த காரின் உட்புற பாகங்களின் ஸ்பை புகைப்படங்கள் மூலம் இந்த பிஎஸ்6 தார் மாடலில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய புதிய சுழலக்கூடிய வகையிலான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது ஏற்கனவே நமக்கு தெரிந்தது தான்.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மட்டுமில்லாமல் புதியதாக மஹிந்திரா டியூவி300 காரில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த 2020 மாடல் பெற்றுள்ளது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் மையத்தில் எம்ஐடி உடன் உள்ள அனலாக் டயல்ஸ் மற்றும் ஃபோல்டிங் கீ ஜாப் போன்றவையும் உள்ளன.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

முந்தைய மாடலை விட ப்ரீமியத்தை தோற்றத்தை பெறுவதற்காக இந்த பிஎஸ்6 மாடலில் FATC (முற்றிலும் தன்னிச்சையாக காரின் க்ளைமேட்டை கட்டுப்படுத்தும் யூனிட்)-ஐ மஹிந்திரா நிறுவனம் பொருத்தியுள்ளது.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த 2020 தார் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட பின்னர் இந்த என்ஜின், காருக்கு வழங்கக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

ஆனால் ட்ரான்ஸ்மிஷனுக்கு கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் நிலையாக இரு காற்றுப்பைகள் உள்ளிட்டவற்றுடன் இந்த புதிய தார் மாடல் அறிமுகமாகவுள்ளது. க்ரூஸ் கண்ட்ரோலையும் இந்த 2020 தார் மாடல் பெற்றுள்ளது.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

தற்சமயம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தார் மாடலில் உள்ள நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 2.5 லிட்டர் எஸ்ஒஎச்சி பிஎஸ்4 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி பவரையும் 247 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

சிஆர்டிஇ 4x4, சிஆர்டிஇ 4x4 ஏபிஎஸ் மற்றும் 700 ஸ்பெஷல் எடிசன் என மூன்று விதமான வேரியண்ட்களில் வெளியாகிவரும் தற்போதைய தலைமுறை தார் மாடல், ரூ.9.95 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த கார் ரூ.10.75 லட்சம்- ரூ.12.50 லட்சம் வரையில் விலை அதிகரிப்பை பெறவுள்ளது.

மஹிந்திரா தார் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா தார் மாடலின் சோதனை ஓட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இதன் சோதனை ஓட்டங்களின் புகைப்படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக இன்னும் சில முறை இணையத்தில் வெளியாகலாம். அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ள இந்த காரை ஆப்-ரோட்டிற்கு இணையாக பொது சாலையில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2020, 17:17 [IST]
English summary
Spy Pics: Mahindra Thar BS6 Model Spotted Testing Again Ahead Of India Launch
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+