கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

வாடிக்கையாளர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ள 2020 மஹிந்திரா தார் மாடல் சுதந்திர தினத்தை குறிவைத்து வருகிற 15ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

மஹிந்திரா நிறுவனம் புதிய தார் மாடலை வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்து பக்கங்களிலும் மேம்படுத்தி சந்தைக்கு கொண்டுவருகிறது. இதனை இந்த 2020 மாடலின் சோதனை ஓட்டங்களின் போது உறுதிபடுத்தி இருந்தோம்.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

இந்த நிலையில் புதிய தார் காரின் உட்புற தரத்தினை வெளிக்காட்டும் விதத்தில் புதிய ஸ்பை படம் வெளியாகியுள்ளது. இந்த படங்களின் மூலம் எந்தவொரு மறைப்புமுமின்றி காட்சியளிக்கும் 2020 தார் மாடலின் கேபினில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பதை அறியலாம்.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

இதுமட்டுமின்றி க்ளைமேட் கண்ட்ரோல், பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், வட்ட வடிவில் கார்பன் ஃபைபரால் ஃபினிஷிங் செய்யப்பட்டது போன்றதான ஏர்-வெண்ட்ஸ் உள்ளிட்டவற்றையும் இந்த இரு-கதவு எஸ்யூவி மாடல் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

இவற்றுடன் நேருக்கு நேராக பார்க்கப்பட்ட அமைப்பில் பின்புற இருக்கை, ஃபோல்டிங் கீ ஃபாப் மற்றும் மைய கன்சோலில் ஸ்விட்ச் உடன் பவர்-விண்டோ மற்றும் இரு அனலாக் டயல்கள் & மத்தியில் டிஜிட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவையும் 2020 தார் மாடலில் எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

மேலும் இதன் கேபின் மென்மையான-தொடுதல் பாகங்களையும் கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடல், டியூவி300+ மற்றும் ஸ்கார்பியோ உள்ளிட்ட வருங்கால மாடல்கள் தயாரிக்கப்படவுள்ள புதிய ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய தாரை காட்டிலும் சற்று அகலமானதாக இந்த 2020 வெர்சன் உருவாக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

இதனால் தான் இதன் கேபினும் கூடுதல் காற்றோட்டமானதாகவும், சவுகரியமானதாகவும் காட்சியளிக்கிறது. உட்புறத்தை தாண்டி வெளிப்புறத்திற்கு வந்தோமேயானால், பெரிய செங்குத்தான ஸ்லாட்களுடன் க்ரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட பம்பர்கள் நம் கண்ணில் படுகின்றன.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

இவை மட்டுமில்லாமல் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட ஹார்ட் டாப் மற்றும் புதிய டிசைனில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும் பளிச்சிடுகின்றன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பெட்ரோல் உள்பட இரு என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் இந்த 2020 மாடல் பெற்றுள்ளது.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

என்ஜின் தேர்வுகளில் ஒன்றான 2.2 லிட்டர் பிஎஸ்6 டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாற்றொரு தேர்வாக வழங்கப்படவுள்ள புதிய 2.0 லிட்டர் ‘டிஜிடிஐ எம்ஸ்டாலியன்' டர்போ-பெட்ரோல் என்ஜின் 187 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும்.

கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...

இந்த இரு என்ஜின்களுடனும் குறை-விகித கியர்பாக்ஸ் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக வழங்கப்படவுள்ளது. அதேநேரம் ஏற்கனவே கூறியிருந்ததுபோல் டார்க் கன்வெர்டரும் கூடுதல் தேர்வாக கொடுக்கப்படவுள்ளது. 2020 தார் மாடலின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆனது 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் பெற்று வரலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra Thar Interiors Exteriors Spied Undisguised
Story first published: Friday, August 7, 2020, 23:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X