அறிமுகத்திற்கு வேகமாக தயாராகி வரும் 2020 மஹிந்திரா தார்... தயாரிப்பு வெர்சனின் தோற்றம் வெளியானது...!
2020 மஹிந்திரா தார் மாடல் அறிமுகத்திற்கு வேகமாக தயாராகி வருவதை உறுதிப்படுத்தும் விதமாக சிவப்பு நிறத்தில் இந்த கார் டீலர்ஷிப்க்கு கொண்டு செல்லும்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படாவிடினும் மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் அதன் அறிமுக பணிகளில் தீவிரமாக ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இதை தான் தற்போது காடிவாடி செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படங்கள் வெளிப்படுத்துகின்றன.

இதற்கு முன்பும் கடந்த பல மாதங்களாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த இந்த கார் இந்த ஸ்பை படங்களில் ஹார்ட் டாப் உடன் காட்சியளிக்கிறது. ஆனால் புதிய தார் மாடல் சாஃப்ட் டாப் வெர்சனிலும் சந்தைப்படுத்தப்படவுள்ளது. 2020 மஹிந்திரா தார் மாடல் வ்ராங்லர் டிசைனில் மேம்படுத்தப்பட்ட வெர்சன் ஆகும்.

அதாவது இந்த 2020 மாடல், முதல் தலைமுறை தார், கிளாசிக் மற்றும் எம்எம்540 போன்ற அதன் முன்னோடி மாடல்களை காட்டிலும் மாடர்ன் தோற்றத்தை கொண்டிருக்கும். ஆனால் எப்படியிருந்தாலும் இந்த புதிய மாடல் கிளாசிக், ட்ரூ-ப்ளூ ‘ஜீப்' தோற்றத்தை அப்படி பெற்றிருக்கும்.

ஏனெனில் இத்தகைய டிசைனிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் இடையே மிக பெரிய அளவிலான ஈர்ப்பு தற்போதும் உள்ளது. மாடர்ன் தொடுதல்களாக சில நேர்த்தியான பேனல்கள், ஹலோஜென் யூனிட்களுக்கு பதிலாக எல்இடி லைட்டிங் அம்சங்கள் மற்றும் முன்புற ஃபெண்டர்களில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை உள்ளன.

ஹார்ட் டாப் வெர்சனில் 2020 மஹிந்திரா தார் மாடல் நேருக்கு நேர் பார்க்கும்படியான பின்புற இருக்கைகளை பெறவுள்ளது. இவற்றுடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வண்ண நிறங்களில் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்கக்கூடிய திரை போன்ற வசதிகளையும் புதிய தார் மாடலில் எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் 2020 தார் மாடலில் 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜினை பொருத்தவுள்ளது. இந்த டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்திய வாடிக்கையாளர்களிடையே டீசல் கார்களுக்கான வரவேற்பு குறைந்து கொண்டே வருவதால் இந்த 2020 மாடலில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வும் வழங்கப்படவுள்ளது.

இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎச்பி பவரை காருக்கு வழங்கவல்லது. மஹிந்திரா நிறுவனத்தின் இசட்இஎன்3 ஏணி-வடிவிலான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்த 2020 மாடலில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளன.

இருப்பினும் இதன் பெட்ரோல் வேரியண்ட்கள் வெளிநாட்டு சந்தைக்களுக்காக தான் முக்கியமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய மஹிந்திரா மாடலில் பகுதி நேர 4-சக்கர ட்ரைவ் சிஸ்டமும் நிலையாக வழங்கப்படவுள்ளது. இந்த புதிய மாடல் இந்திய சந்தையில் இந்த வருட ஜீலை மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








