புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 2020 மஹிந்திரா மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

தற்போது டீம்பிஎச்பி செய்தி தளத்தால் வெளியாகியுள்ள தகவலின்படி புதிய தார் மாடல் வரும் 15ஆம் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் நேரலையாக வெளியிடப்படவுள்ளது. அதனை தொடர்ந்து இந்த புதிய தலைமுறை காரை பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகவுள்ளன.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

அதாவது டீலர்ஷிப்ஸ் & ஆன்லைனில் முன்பதிவு ஆரம்பமாகவுள்ள தேதி, டெஸ்ட் ட்ரைவ்கள் மற்றும் டெலிவிரி துவங்கவுள்ள தேதிகள் உள்ளிட்டவை இதன் 15ஆம் தேதி அறிமுகத்தை தொடர்ந்து வெளியாகவுள்ளன. புதிய தலைமுறை தார் மாடல் ஜென்ரேஷன் 3 சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

இதன் காரணமாக தற்சமயம் விற்பனையில் உள்ள தார் மாடலை காட்டிலும் புதிய 2020 மாடல் சற்று அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம். முன்னதாக புதிய தலைமுறை தார் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்தது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

அத்தகைய நேரங்களில் வெளியாகி இருந்த சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்களின் மூலம் இதன் விற்பனை மாடல் புதியதாக கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்களை பெற்றிருந்ததை அறிய முடிந்திருந்தது. ஆனால் பெரும்பான்மையான பாகங்கள் தற்போதைய தார் மாடலை தான் ஒத்திருந்தன.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

அதாவது பொனெட் க்ளாம்ப்கள், செங்குத்தான ஸ்லாட்களுடன் க்ரில் மற்றும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவற்றின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. 2020 தார் மாடல் ஹார்ட் டாப், சாஃப்ட் டாப் என இரு விதமான தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

உட்புறத்தில் புதிய டிசைனில் டேஸ்போர்டை பெற்றுள்ள இந்த புதிய தலைமுறை மஹிந்திரா மாடல் வழக்கம்போல் வட்ட வடிவிலான ஏர்-வெண்ட்ஸை ஏற்றிருந்தாலும், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான மைய ஃபேஸியாவை புதியதாக கொண்டுள்ளது. இந்த மாற்றத்தினை இதன் ஸ்பை படங்களில் பார்த்திருப்போம்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

அதேபோல் பின் இருக்கை வரிசைகள் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் பார்த்தப்படி வழங்கப்பட்டுள்ளன. 6-ல் இருந்து 7 வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 2020 தார் மாடலுக்கு இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் அறிமுக தேதி வெளியானது... முன்பதிவுகள் எப்போது துவங்குகின்றன...?

இதில் ஒன்றான 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனையும், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 138 பிஎச்பி பவரையும் காருக்கு வழங்கக்கூடியவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரான்ஸ்மிஷனிற்கு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 4, 2020, 23:15 [IST]
English summary
Next-gen Mahindra Thar unveil on August 15, 2020
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+