அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு வழியாக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்று அறிமுகமாக ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

முந்தைய தலைமுறை சுசுகி ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்று புதிய 2020 சுசுகி ஸ்விஃப்ட் மாடலும் இரு விதமான முன்புற க்ரில் தேர்வில் கிடைவுள்ளது. இந்த இரு க்ரில் தேர்வுகளில் கிடைமட்ட ஸ்லேட்கள் மற்றும் இந்த கிடைமட்ட ஸ்லேட்களுடன் தேன்கூடு வடிவிலான பேட்டர்ன் உள்ளிட்டவை அடங்கும்.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

க்ரில் தேர்வுகளுடன் சில முன்புற பம்பர் தேர்வுகளையும் 2020 சுசுகி மாடல் கொண்டுள்ளது. இருப்பினும் இதன் முன்புற பம்பர் பெரிய அளவில் திருத்தியமைக்கப்படவில்லை. ஆனால் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் இந்த ஹேட்ச்பேக் மாடலுக்கு கூடுதலான ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகின்றன.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

உட்புறம் தற்சமயம் ஜப்பானில் விற்பனையாகி கொண்டிருக்கும் ஸ்விஃப்ட் மாடலை தான் ஒத்து காணப்படுகிறது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை சுசுகி நிறுவனம் எக்ஸ்ஜி, ஆர்எஸ், ஹைப்ரீட் எம்ஜி, ஹைப்ரீட் ஆர்எஸ் மற்றும் ஹைப்ரீட் எஸ்இசட் உள்ளிட்ட வேரியண்ட்களில் சந்தைப்படுத்தவுள்ளது.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

இவற்றுடன் 2020 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாடிக்கையாளர்கள் நான்கு 2-டோன் நிறத்தேர்வுகளிலும் பெற முடியும். இந்தியா உள்பட வெளிநாட்டு சந்தைகளில் இந்த 2020 சுசுகி மாடல் வேறுப்பட்ட 'ஹைப்ரீட்' பேட்ஜ் டிசைன் உடன் ஹைப்ரீட் மற்றும் மில்ட்-ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யபடவுள்ளது.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

இதன்படி இந்த மாடலின் டாப் வேரியண்ட்டான ஹைப்ரீட் எஸ்இசட் முழு-ஹைப்ரீட் என்ஜின் அமைப்பையும், ஹைப்ரீட் எம்ஜி மற்றும் ஹைப்ரீட் ஆர்எஸ் வேரியண்ட்கள் 48 வோல்ட் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தையும் பெற்றுள்ளன.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

இதில் 48 வோல்ட் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் தான் 2020 ஸ்விஃப்ட் மாடல் கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இத்தகைய சிறிய அளவிலான அப்டேட்களை பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் மாடல் இந்தியாவிற்கு இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது 2021ஆம் வருடத்தின் துவக்கத்திலோ வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

கடைசியாக மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து டிசைர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.89 லட்ச ஆரம்ப விலையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிசைர் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

கடந்த 2016ல் முதன்முதலாக ஜப்பான் சந்தையில் அறிமுகமான ஸ்விஃப்ட் மாடல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு பிறகு தனது ஆயுட்காலத்தை அதிகரிக்கும் விதமாக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை தற்போது பெற்றுள்ளது. ஸ்விஃப்ட் மாடலின் நான்காம் தலைமுறை காராக வெளிவரும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வழக்கமான எடை குறைவான ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அட்டகாசமான முன்புறத்துடன் வெளிவரும் 2020 சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்... முழு விபரங்கள் வெளியீடு...

ஃபேஸ்லிஃப்ட் வெர்சனிற்காக முற்றிலும் மாறுப்பட்டதாக இல்லாவிடினும், சில அப்டேட்களால் புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த 2020 மாடல் நிச்சயம் முதன்முறையாக காரை வாங்க நினைப்போர்களை கவரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 16, 2020, 18:30 [IST]
English summary
India-Bound 2020 Suzuki Swift Facelift Officially Unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+