விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

2020மை டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் கோயம்புத்தூர் அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியமான விற்பனை மாடலாக விளங்கும் டியாகோ மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ரூ.4.60 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் இந்த வருட துவக்கத்தில் அறிமுகமானது.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் தற்சமயம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த காரில் டீசல் என்ஜினும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதியினாலும், வாடிக்கையாளர்கள் அவ்வளவாக தேர்வு செய்யாததினாலும் ரத்து செய்யப்பட்டது.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

இந்த நிலையில் விற்பனையில் உள்ள டாடா டியாகோ மாடல் தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளதால் இது பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. தற்போதைய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட் யூனிட் வழங்கப்பட்டு வருகிறது.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

ஆனால் எல்இடி டிஆர்எல்களையும், ப்ரோஜெக்டர்களையும் பெற்றிருக்கவில்லை. இதனால் அவற்றை இந்த புதிய டீசல் வேரியண்ட்டில் எதிர்பார்க்கலாம். அதேபோல் புதிய ஏர்டேம்கள் மற்றும் ஃபாக் விளக்குகளுடன் ரீடிசைனில் முன்புற பம்பரையும் டியாகோ டீசல் மாடல் பெறும் என தெரிகிறது.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

உட்புறத்தில் இந்த ஹேட்ச்பேக் கார் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஹர்மன் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

இவற்றுடன் அப்டேட்டான உள்ளமைவு மற்றும் ஏசி வெண்ட்ஸை சுற்றிலும் காரின் நிறத்தில் பாகங்களும் இந்த காரில் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்கு டியோகோ மாடல் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி மற்றும் அதிவேகத்தை எச்சரிக்கும் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

இதற்கிடையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் ஜேடிபி வெர்சன்களை இந்திய சந்தையில் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது. இந்நிறுவனம் கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் 2017ல் இருந்து ஏற்படுத்தி கொண்ட கூட்டணியின் மூலம் இந்த இரு மாடல்களும் சந்தைப்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...?

ஏற்கனவே கூறியதுபோல் டியாகோ ஹேட்ச்பேக் மாடல் தான் டாடா நிறுவனத்திற்கு விற்பனையில் முக்கிய பங்களிப்பாளராக விளங்கி வருகிறது. இதனை புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் விற்பனை நிலவரத்தை பார்த்தால் நீங்கள் அறியலாம். டியாகோவிற்கு மாருதி சுசுகி செலிரியோ மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 மாடல்கள் இந்திய சந்தையில் போட்டியாகவுள்ளன.

Most Read Articles

English summary
2020 Tata Tiago spied testing – Could this be a new BS6 diesel variant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X