2020 டொயோட்டா காம்ரி செடான் காரின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை அறிவிப்பு...
டொயோட்டா இந்தியா நிறுவனம், பிஎஸ்6 தரத்தில் விரைவில் அறிமுகமாகவுள்ள காம்ரி மாடலின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.37.88 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிக்வீல்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய காம்ரி மாடலின் விலை இதன் முந்தைய தலைமுறை காரை காட்டிலும் ரூ.93,000 அதிகமாகும். ஏனெனில் பிஎஸ்4 காம்ரி மாடல் சந்தையில் ரூ.36.95 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிக்கப்பட்டாலும் இந்த காரில் அதே 2.5 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் அமைப்பில் பெட்ரோல் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டாருடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 178 பிஎச்பி பவர் மற்றும் 221 என்எம் டார்க் திறனையும், எலக்ட்ரிக் மோட்டார் 120 பிஎச்பி மற்றும் 202 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன.

மொத்தமாக இவை இரண்டின் மூலமாக 218 பிஎச்பி பவரை பெற முடியும். இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு வழங்கப்படுகின்ற சிவிடி கியர்பாக்ஸ், காரை முழு இவி மோடிலும் அல்லது முழு எரிபொருள் என்ஜின் மோடிலும் அல்லது இரண்டும் இணைந்த மோடிலும் இயக்குகிறது.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட காம்ரி மாடல் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், சவுகரியமான மடக்கும் விதத்திலான முன்புற இருக்கைகள், ஹெட்-அப் திரை, க்ரூஸ் கண்ட்ரோல், பவர் அட்ஜெஸ்டபிள் ஸ்டேரிங், சூரிய ஒளி படாத வகையிலான பின்புறம் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு தொழிற்நுட்பங்களாக ஒன்பது காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கும் விதத்திலான கேமிரா, எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

காம்ரி பிஎஸ்6 மாடலுக்கு வெள்ளை, சில்வர், சிவப்பு, ப்ரவுன், க்ராபைட் மற்றும் இரு ஷேட்களில் கருப்பு என்ற 7 நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. செடான் ரக காரான டொயோட்டா காம்ரிக்கு போட்டியாக சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர் மாடல் உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் விரைவில் சந்தைக்கு வரவுள்ள ஸ்கோடா சூப்பர் மாடலின் புதிய தலைமுறை காருக்கு இந்நிறுவனம் முன்பதிவுகளை ரூ.50,000-ல் ஏற்று வருகிறது. இந்த செடான் காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.30 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








