2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

க்ளெபர் சில்வா, பிரேசில் நாட்டை சேர்ந்த கலைஞரான இவர் சில எதிர்கால கார் மாடல்களுக்கு உருவம் அளித்துள்ளார். இந்த வகையில் புதிய தலைமுறை ஜாஸ் மாடலின் அடிப்படையில் தோற்றத்தை பெற்றுள்ள அடுத்த ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

ஹோண்டா நிறுவனம் அடுத்த தலைமுறை டபிள்யூஆர்-வி மாடலை ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. ஆனால் உண்மையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்களை போன்று ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

MOST READ: இது புதுசா இருக்கே... டபுள் வருமானம் பார்க்க சூப்பர் ஐடியா... கோவையை கலக்கும் கில்லாடி ஆட்டோ டிரைவர்

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

இருப்பினும் இந்நிறுவனத்தின் ஜாஸ் மாடலுடன் ஒப்பிடும் விற்பனையில் சற்று பரவாயில்லை. இதன் முரட்டுத்தனமான தோற்றம், விசாலமான கேபின் மற்றும் நம்பகமான என்ஜின் அமைப்பினால் குடும்பஸ்தர்களின் தேர்வுகளுள் ஒன்றாக உள்ளது.

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

இதனால் தான் விற்பனையில் ஜொலிக்காவிட்டாலும் டபிள்யூஆர்-வி மாடலின் அடுத்த தலைமுறை காரை கொண்டுவர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் பிரேசிலை சேர்ந்த கலைஞர் க்ளெபர் சில்வா புதிய தலைமுறை டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றத்தை அடுத்த தலைமுறை ஹோண்டா ஜாஸ் மாடலின் அடிப்படையில் உருவாக்கியுள்ளார்.

MOST READ: வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

புதிய தலைமுறை ஜாஸ் மாடலிற்காக ஹோண்டாவின் டிசைன் குழுவினர் எம்பிவி தோற்றத்தை ஒரிஜினல் ஜாஸ் மாடலில் இருந்து எடுத்திருந்தாலும், நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் தீம்மிற்கு ஏற்றப்படி மாடர்ன் ஸ்டைலிங் தொகுப்புகளை வழங்கியுள்ளனர்.

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

இதற்கு கிட்டத்தட்ட ஒத்துப்போகும்படியாக தான் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள 2022 டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் உள்ளது. இருப்பினும் இதன் விற்பனை மாடலில் படத்தில் உள்ள ஜாஸ் காரின் மந்தமான முன்புறத்திற்கு பதிலாக க்ரோம் அலங்காரத்துடன் கம்பீரமான முன்பகுதியை எதிர்பார்க்கலாம்.

MOST READ: சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

அதேபோல் ஹெட்லேம்ப் அமைப்பையும் சற்று வித்தியாசமாகவும், முன்புற பம்பர் சிறிது பெரியதாக பிளாஸ்டிக் பாகங்களுடன் வெளிவரலாம். இவற்றுடன் மொத்த தோற்ற அடிப்படையில் பார்த்தால் புதிய தலைமுறை டபிள்யூஆர்-வி மாடலானது பிளாஸ்டிக் க்ளாடிங், ரூஃப் ரெயில்கள் மற்றும் புதிய அலாய்சக்கரங்களையும் பெறவுள்ளது.

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

க்ரவுண்ட் க்ளிட்யரென்ஸையும் தற்போதைய ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலை காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கலாம். இதேபோன்று காரின் பின்புறத்தையும் அப்டேட்டான டெயில்லேம்ப்கள் மற்றும் போல்ட்டான பம்பருடன் எதிர்பார்த்தாலும் உட்புறம் தற்சமயம் விற்பனையில் உள்ள ஜாஸ் மாடலை தான் ஒத்து காணப்படும்.

MOST READ: சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை

2021 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் தோற்றம் இப்படி தான் இருக்குமாம்..!

ஹோண்டா நிறுவனம் புதிய டபிள்யூஆர்-வி மாடலின் அறிமுகம் குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை. எப்படியிருந்தாலும் இந்திய சந்தைக்கு இதன் தற்போதைய பெட்ரோல் என்ஜின் தான் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
2021 Honda WR-V (Based On New-gen Honda Jazz) Visualized Digitally
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X