தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பு காரான புதிய தலைமுறை ஐ20-ஐ பற்றிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் என் லைன் உடையில் வெளிவரவுள்ள இந்த புதிய தலைமுறை ஹூண்டாய் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

புதிய ஹூண்டாய் ஐ20 முழு-நீள என் லைன் கார் கிடையாது. கூடுதல் ஆற்றல்மிக்க என்ஜின் மற்றும் ஸ்போர்ட்டியான பண்பை வைத்துதான் இது என் லைன் காராக அழைக்கப்படுகிறது.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

ஹூண்டாய் நிறுவனம் ஒரு வழியாக புதிய ஐ20 என் காரின் முதல் டீசர் படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த வருட இரண்டாம் பாதியில் குறிப்பிட்ட சில வெளிநாட்டு சந்தைகளை ஹூண்டாயின் இந்த என் லைன் கார் சென்றடையலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்வீடன் நாட்டில் பனி நிறைந்த பகுதியில் இந்த ஹாட் ஹேட்ச்பேக் கார் சோதனை செய்யப்படும் வீடியோவை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதன்மூலம் ஐ20 என் மாடல் பெரிய உருவம் கொண்ட ஹூண்டாய் ஐ30 என் மாடலின் டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் உருவாகுவதை அறிந்திருந்தோம்.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

இதன்படி அகலமான மற்றும் நீளமான காற்று டேம்களை புதிய ஐ20 என் லைன் கார் பெற்றுள்ளது. இந்த ஏர்-டேம் சிவப்பு நிற அவுட்லைன்களை கொண்டுள்ளதை இந்த டீசர் படங்களில் பார்க்க முடியும். அதேபோல் இதன் 18 இன்ச் அலாய் சக்கரங்களில் ஹீண்டாய் என் லைன் கார்களுக்கே உண்டான விதத்தில் ப்ரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

இவை மட்டுமின்றி மேற்கூரையின் மீது ஒருங்கிணைப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் பெரிய எக்ஸாஸ்ட் குழாய்களுடன் சிவப்பு நிற பக்கவாட்டு ஸ்கிர்ட்களையும் என் லைன் உடையில் வந்துள்ளதால் புதிய தலைமுறை ஐ20 ஏற்றுள்ளது. மேலும் மொத்த காரும் வெளிப்புறத்தை ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் இந்த படங்களில் பெற்றுள்ளது.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

இந்த வகையில் என் கார்களின் செயல்திறனை குறிக்கும் வகையில் நீல நிற பெயிண்ட் அமைப்பை இந்த கார் பெற, காரின் மேற்கூரை, ஸ்கிர்ட்ஸ், பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் பில்லர்கள் உள்ளிட்டவை பாண்டோம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

உட்புற கேபினும் ஹூண்டாயின் என் பிராண்டிற்கே உரிதான உள்ளமைவு மற்றும் சுற்றிலும் சிவப்பு நிற ஹைலைட்களுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் முக்கியமான அப்கிரேட் என்று பார்த்தால், உடலை ஒட்டிய இருக்கை அமைப்பை ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 காரில் வழங்கியிருக்கலாம்.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

செயல்திறனை கருத்தில் கொண்டு ஐ20 ஹேட்ச்பேக் கார் என் லைனிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் இதன் புதிய தலைமுறையில் ஆற்றல்மிக்க 1.6 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. அதிகப்பட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு லிமிடேட்-ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் உடன் செயல்படும். 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக வெளிவரும் இந்த என் லைன் காரின் அதிகப்பட்ச வேகம் 230kmph ஆகும். ஏனெனில் காரின் மொத்த எடை வெறும் 1,200 கிலோ மட்டுமே.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

சஸ்பென்ஷன் பணியினை மேற்கொள்ள முன்புறத்தில் வலுவூட்டப்பட்ட மெக்பெர்சன் ஸ்ட்ரட் செட்அப்-பும், பின்புறத்தில் தடிமனான டோரிசன் பீம்-மும் கொடுக்கப்படவுள்ளன. 320மிமீ முன்பக்க டிஸ்க் ப்ரேக்குகள் ப்ரேக்கிங் பணியினை கவனிக்கவுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், ஹூண்டாய் ஐ20 என் கார் அடுத்த ஆண்டு மத்தியில் ஐரோப்பா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு சென்றுவிடும்.

தாறுமாறான தோற்றத்தில் 2021 ஹூண்டாய் ஐ20 என்... 1.6 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வருகிறது...

இந்தியாவை பொறுத்தவரையில், புதிய ஐ20 என் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகுவதற்கு கூட வாய்ப்பில்லை. தற்சமயம் விற்பனையில் ஐ20-ன் புதிய தலைமுறை தான் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இந்த புதிய தலைமுறை ஹேட்ச்பேக் காரும் கடந்த வாரம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட என்-லைன் தொகுப்புகளை பெற்றுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2021 Hyundai i20 Most Powerful N Variant Teased – 1.6 L Turbo 200 BHP
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X