2021 கார்னிவல் எம்பிவியின் உட்புற கேபின் இவ்வாறுதான் இருக்கும்- அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது கியா
வெளிபுற படங்களை வெளியிட்டதை தொடர்ந்து கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 கார்னிவல் எம்பிவி காரின் உட்புற படங்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த தலைமுறை கார்னிவல் காரின் உட்புற டிசைன் கான்செப்ட்டிற்கு ‘இடஞ்சார்ந்த திறமைகள்' என பெயர் வைத்துள்ள கியா நிறுவனம் இதில் சவுகரியமான மற்றும் எதிர்கால தொழிற்நுட்பங்களின் மூலம் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வகையில் தற்போதைய கார்னிவல் மாடலுடன் ஒப்பிடுகையில் முழுவதும் வேறுப்பட்ட கேபினை பெற்றுவரவுள்ள இந்த 2021 காரின் உட்புற கேபின் அடர் மற்றும் அடர் குறைந்த பழுப்பு என்ற ட்யூல்-டோன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய டிசைனிலான டேஸ்போர்டு 12.3 இன்ச்சில் இரு திரைகளை கொண்டுள்ளது.

இதில் ஒன்று தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கும் வழங்கப்படவுள்ளன. இருப்பினும் ப்ரீமியம் உணர்விற்காக இந்த இரு திரைகளும் ஒரே ப்ரேம்மிற்குள் அடக்கப்பட்டுள்ளன.

இன்ஃபோடெயின்மெண்ட் செயல்பாடுகளை தொடுதலின் மூலமாகவே கண்ட்ரோல் செய்ய முடியும். இதேபோன்று இதற்கு கீழேயுள்ள பேனல் ஆனது க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு, மைய கன்சோலில் தான் ட்ரான்ஸ்மிஷனிற்கான ஷிஃப்ட்-பை-வயர் உள்ளது.

2021 கியா கார்னிவல் எம்பிவி கார் நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதல் அகலத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உட்புறம் கேபினும் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. இதன் 3 அல்லது 4 இருக்கை வரிசை அமைப்பில் அதிகப்பட்சமாக 7-லிருந்து 11 பயணிகள் வரை அமர முடியும்.

கியாவின் இந்த 7 இருக்கை வெர்சன் கார் கேப்டன் இருக்கைகளை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பேக்ரெஸ்ட்ஸ், ஆர்ம்ரெஸ்ட்ஸ் மற்றும் லெக்ரெஸ்ட்ஸ் உடன் ‘பிஸ்னஸ் க்ளாஸ்' தரத்தில் இரண்டாவது வரிசையில் கொண்டுள்ளது. இதனால் இதன் இரண்டாம் இருக்கை வரிசையும் யுஎஸ்பி சார்ஜர்களை கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி மொபைல் கருவிகளை வைக்க நெட், ரியர் கன்சோலில் புதியதாக சேமிப்பு அலமாரி உள்ளிட்டவற்றையும் கேப்டன் இருக்கைகளுக்காக இந்த கார் பெற்றுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த 2021 எம்பிவி காரில் 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் மற்றும் 277 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படும் என தெரிகிறது.

புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடல் புதிய தலைமுறை என்3 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தான் புதிய சொரெண்டோ எஸ்யூவி மாடலும் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








