லெக்ஸஸ் ஐஎஸ் செடான் காரின் அறிமுக தேதி வெளியீடு... அமெரிக்காவில் இருந்து டிஜிட்டலில் வெளியாகிறது...

லெக்ஸஸ் நிறுவனம் ஐஎஸ் செடான் மாடலின் உலகளாவிய அறிமுகத்தை வருகிற 16ஆம் தேதிக்கு ஒதுக்கியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் தற்போது இந்நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த புதிய டீசர் வீடியோ, ஐஎஸ் செடான் காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள புதிய டெயில்லைட்கள் உள்பட காரை சுற்றிய பகுதிகள் அனைத்தையும் மிகவும் நெருக்கமாக காட்டுகிறது. இதில் டெயில்லைட்கள் முக்கோண டிசைனில் இடப்புறத்தில் இருந்து வலப்புறமாக வளைக்கப்பட்ட விளக்குகளுடன் உள்ளன.

லெக்ஸஸ் ஐஎஸ் செடான் காரின் அறிமுக தேதி வெளியீடு... அமெரிக்காவில் இருந்து டிஜிட்டலில் வெளியாகிறது...

இந்த வீடியோவில் ஐஎஸ் செடான் மாடல் ஸ்போர்ட் முத்திரையை பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. காரின் பின்புறத்தில் ஒருங்கிணைப்பட்ட ரியர் டிஃப்யூஸரும் பெரிய அளவில் பம்பரும் வழங்கப்பட்டுள்ளன. மொத்த தோற்ற அளவில் பார்த்தால் இந்த செடான் கார் லெக்ஸஸின் தனித்துவமான எல்எஸ் மாடலின் டிசைனை தான் ஏற்றுள்ளது.

லெக்ஸஸ் ஐஎஸ் செடான் காரின் அறிமுக தேதி வெளியீடு... அமெரிக்காவில் இருந்து டிஜிட்டலில் வெளியாகிறது...

நிறுவனத்தின் புதிய டிஎன்ஜிஏ-எல் கட்டமைப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய ஐஎஸ் செடான் மாடலில் 3.5 லிட்டர் ட்வின்-டர்போ வி6 என்ஜினை லெக்ஸஸ் நிறுவனம் பொருத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 422 பிஎச்பி பவரையும், 599 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

லெக்ஸஸ் ஐஎஸ் செடான் காரின் அறிமுக தேதி வெளியீடு... அமெரிக்காவில் இருந்து டிஜிட்டலில் வெளியாகிறது...

மற்றப்படி இந்த 2021 லெக்ஸஸ் செடான் காரை பற்றிய கூடுதலான தகவல்கள் எதையும் பெற முடியவில்லை. 2013ல் முதன்முறையாக சந்தைக்கு வந்த இந்த ஐஎஸ் செடான் மாடல் கடந்த 2016ல் வெறும் மில்டு ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை மட்டுமே பெற்றுள்ளது.

லெக்ஸஸ் ஐஎஸ் செடான் காரின் அறிமுக தேதி வெளியீடு... அமெரிக்காவில் இருந்து டிஜிட்டலில் வெளியாகிறது...

இந்த வகையில் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறுவதால் இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் நிச்சியம் முக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய ஐஎஸ் செடான் மாடலுக்கு விற்பனையில் போட்டியினை அளிக்க மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடல்கள் தயாராகவுள்ளன.

லெக்ஸஸ் ஐஎஸ் செடான் காரின் அறிமுக தேதி வெளியீடு... அமெரிக்காவில் இருந்து டிஜிட்டலில் வெளியாகிறது...

முன்னதாக இந்த செடான் கார் கடந்த 10ஆம் தேதி அறிமுகமாக இருந்தது. கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் இதன் அறிமுகம் திட்டமிடப்பட்ட தேதியில் நடைபெறாது என இந்த மாத துவக்கத்திலேயே தகவல்கள் வெளியாகிவிட்டன. இதனால் ஒரு வார கால தாமதத்துடன் வருகிற 15ஆம் தேதி ஐஎஸ் செடான் மாடல் அறிமுகமாகவுள்ளது.

இந்த அறிமுகம் குறித்து லெக்ஸஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து டிஜிட்டல் கான்ஃபெரென்ஸ் மூலமாக ஐஎஸ் செடான் மாடலின் அறிமுக நிகழ்ச்சி ஜூன் 15ஆம் தேதி சரியாக இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #லெக்ஸஸ் #lexus
English summary
2021 LEXUS IS TO DEBUT JUNE 15
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X