புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள்...
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி எப்போது விற்பனைக்கு வரும்? என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகியுள்ளன.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த சூழலில், வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மோட்டோராய்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை தொடர்ந்து, புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

இந்த காரும் தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இதற்கிடையே புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியை ஏற்கனவே கூறியபடி மஹிந்திரா நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிக தீவிரமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது.

டிசைன் மாற்றங்கள் மட்டுமல்லாது பல்வேறு கூடுதல் வசதிகளுடனும் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. அத்துடன் தற்போதைய தலைமுறை மாடலை விட பரிமாணங்களில் பெரிய மாடலாக புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கேபினில் நல்ல இடவசதி கிடைக்கும்.

மேலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட்கள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவையும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் உட்புறமும் முற்றிலுமையாக மாற்றியமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எஸ்யூவியில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் 8 இன்ச் டச்ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தலைமுறை தார் எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகள்தான் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியிலும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 160 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images are of the current model, used for representational purposes only.


Click it and Unblock the Notifications








