சென்னைக்கு அருகே மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...
மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் சென்னைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் உள்ள க்ராஸ்ஓவர் கார்களுள் ஒன்றாக இருக்கும் மஹிந்திராவின் புதிய தயாரிப்பு மாடலான எக்ஸ்யூவி500 இந்த வருட இறுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் அடுத்த வருடத்தில் தான் சந்தைக்கு வரும் என தெரிகிறது.

இதற்கிடையில் இந்த 2021 எக்ஸ்யூவி500 மாடல் தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இதன் இந்த சோதனை மாதிரியில் வழக்கம்போல் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்கள் நீக்கப்பட்டு தற்காலிமானவை பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால் காரின் ஷீட் உலோக பகுதி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது போல் தான் தெரிகிறது. டெயில்லைட் துவாரங்கள் காரின் டெயில்கேட்டில் முக்கோண வடிவிலான பாகங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை வெளிக்காட்டுகின்றன. இருப்பினும் மொத்த தோற்ற அளவில் தற்போதைய தலைமுறை எக்ஸ்யூவி500 காரை தான் இந்த சோதனை கார் ஒத்து காணப்படுகிறது.

ஆனால் பெரிய அளவில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய ஹெட்லைட்கள் மற்றும் சற்று பெரியதாக பின்பகுதி உள்ளிட்ட அம்சங்களை இந்த காரில் எதிர்பார்க்கலாம். தற்சமயம் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500 கார் கொண்டுள்ள கதவு ஹேண்டிலுக்கு பதிலாக இந்த சோதனை மாதிரி இழுக்கும் விதத்திலான கதவு ஹேண்டில்களை கொண்டுள்ளது.

முன்னதாக வெளியாகியிருந்த இந்த 2021 மாடலின் ஸ்பை படங்களின் மூலமாக காரின் முன்பகுதியில் புதிய ஹெட்லேம்ப்கள், க்ரில், பம்பர் மற்றும் ஃபாக்லைட் ஹௌசிங்குகள் வழங்கப்பட்டிருப்பதை அறிய முடிந்திருந்தது. அதேபோல் உட்புற கேபினும் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டிருந்ததையும் அறிந்திருந்தோம்.

இயக்க ஆற்றலிற்கு 2021 எக்ஸ்யூவி500 மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. அதிகப்பட்சமாக 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் மூலம் இதன் பிரிவிலேயே ஆற்றல்மிக்க காராக இது விளங்கவுள்ளது.

இந்த டீசல் என்ஜின் உடன் அறிமுகத்திற்கு பிறகு டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் எதிர்பார்க்கலாம். விற்பனையில் டாடா ஹெரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு வரும் இந்த மஹிந்திரா காருக்கு கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களின் டாப் வேரியண்ட்களும் போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications








