ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

நிஸான் நிறுவனம் நாளை (ஜூன் 15) உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ள 2021மை ரோக் காம்பெக்ட் க்ராஸ்ஓவர்/மிட்-சைஸ் எஸ்யூவி மாடலின் டீசர் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள இந்த புதிய காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை நிஸான் எக்ஸ்-ட்ரைல் மாடலின் லேட்டஸ்ட் மாடலாக வெளிவரவுள்ள இந்த 2021 காரின் தெளிவான புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தன.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

இந்த படங்களுடன் தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் படத்தின் மூலம், முன்னோடி நிஸான் மாடல்களை காட்டிலும் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மிக பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

இவற்றின் மூலமாக பார்க்கும் ஹைலைட்டாக 2021 ரோக் மாடல் திருத்தியமைக்கப்பட்ட வி-மோஷன் க்ரில், முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள், பழுப்பு/கருப்பு நிறத்தில் உட்புறம், பெரிய அளவிலான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5-ஸ்போக் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

இந்த புதிய நிஸான் கார் குறித்து வெளியாகி வரும் தகவல்களில் வழக்கமான 2.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் இயக்க ஆற்றலுக்காக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவை சற்று அதிகமாக 180 பிஎச்பி மற்றும் 237 என்எம் டார்க் திறனில் எதிர்பார்க்கலாம்.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி 2020மை நிஸான் கிக்ஸ் மாடலின் தாய்லாந்து வெர்சனை போன்று ஹைப்ரீட் என்ஜின் தேர்வுடனும் புதிய ரோக் மாடல் விற்பனைக்கு வரவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

25,300 டாலர்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்போதைய 2020மை நிஸான் ரோக் மாடல் இண்டெலிஜண்ட் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டத்துடன் எஸ், எஸ்வி மற்றும் எஸ்எல் என்ற மூன்று ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

குறிப்பாக அமெரிக்கா உள்பட சர்வதேச சந்தையில் 2021 ரோக் மாடலானது டொயோட்டா ஆர்ஏவி-4, ஃபோர்டு எஸ்கேப் மற்றும் ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடவுள்ளது. மற்றப்படி இந்திய சந்தைக்கு இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

ஐரோப்பாவில் இருந்து வெளியேற முடிவு... அமெரிக்க சந்தைக்காக நிஸானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்...

ஏனெனில் நிஸான் நிறுவனம் இந்திய சந்தைக்காக கிக்ஸ் பிஎஸ்6 மற்றும் ஜிடி-ஆர் மாடல்களை தயாரித்து வருகிறது. அமெரிக்க சந்தையில் தீவிரமாக கவனம் செலுத்தவுள்ள நிஸான் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
2021 Nissan Rogue (X-Trail) teased ahead of global debut on June 15
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X