நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

சோதனை கருவிகளுடன் 2021 டாடா நெக்ஸான் கார் ஒன்று புனேவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

கியா சொனெட், நிஸான் மேக்னைட் போன்ற புதிய கார் மாடல்கள் அறிமுகமாகியுள்ள சப்காம்பெக்ட் யுவி பிரிவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக டாடா நெக்ஸான் விளங்குகிறது.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

இந்த நிலையில்தான் தற்போது புனேவில் ரியல் ட்ரைவிங் உமிழ்வு அமைப்புடன் நெக்ஸான் எஸ்யூவி கார் ஒன்று சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. சித்தார்த் பண்டேவர் என்பவர் மூலம் இந்த ஸ்பை படம் கிடைத்துள்ளது.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

இது நெக்ஸான் டிசிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கான சோதனை ஓட்டமாக இருக்கலாம். இதனால் விரைவில் அடுத்த வருடத்தில் டாடா நிறுவனம் நெக்ஸானில் கூடுதல் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வை கொண்டுவர வாய்ப்புள்ளது.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸில் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் புதியதாக கொண்டுவரப்படவுள்ளதாக கடந்த சில மாதங்களாக நமது செய்திதளத்தில் கூறி வருகிறோம் இதனால் இரண்டிலும் ஒரே டிசிடி யூனிட் தான் வழங்கப்படலாம்.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

பஞ்ச் என்ற பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஆட்டோமேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்படவுள்ள இந்த ஈரமான க்ளட்ச் வகையை ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் கியர்-ஷிஃப்டர் லுமேக்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கப்படவுள்ளது.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

தற்சமயம் டாடா நெக்ஸானில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் ரெவோடார்க் டீசல் என்ற என்ஜின் தேர்வுகள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகின்றன.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

ஏஎம்டி இயக்கி ஒரு தானியங்கி வசதியை அளிக்கிறது என்றாலும், அதன் வரம்புகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளன. ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கொண்ட கார்களை முதன்முறையாக பயன்படுத்துவோருக்கு அதிக வேகங்களில் கியரை மாற்றும்போது ஒரு தடுமாற்றம் இருக்கும்.

நெக்ஸானிலும் ஆட்டோமேட்டிக் தேர்வு!! விரைவில் கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்

ஏனெனில் ஏஎம்டி கியர்பாக்ஸில் கியர் மாற்றம் அவ்வளவு மென்மையானதாக இருக்காது. ஆனால் டிசிடி கியர்பாக்ஸின் செயல்பாடு விரைவானதாகவும், மென்மையானதாகவும் இருக்கின்றன. இருப்பினும், ஏஎம்டி கியர்பாக்ஸுக்கு மாற்றாக இல்லாமல், நெக்ஸானின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் கூடுதல் தேர்வாக டிசிடி வழங்கப்படலாம்.

Most Read Articles
English summary
2021 Tata Nexon DCT Automatic petrol Spied Testing In Pune
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X