2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

தாய்லாந்து நாட்டு சந்தையில் கடந்த ஜூன் மாதம் அறிமுகமானதை தொடர்ந்து 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

தாய்லாந்து சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக அறிமுகமான ஃபார்ச்சூனர் மாடலில் குறிப்பிடத்தகுந்த காஸ்மெட்டிக் மாற்றங்களை காண முடிந்திருந்தது. அந்நாட்டு சந்தையில் இந்த 2021 மாடல் ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜன்டர் என்ற இரு வெர்சன்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இந்த இரு வெர்சன்களுக்கும் இடையே தோற்றத்தில் வித்தியாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இந்த நிலையில் தற்போது மறைப்பு எதுவுமின்றி ஃபார்ச்சூனர் கார் முதன்முறையாக இந்தியாவில் தமிழ்நாட்டில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் அறிமுகத்தை மிக நெருக்கமாக செப்டம்பர் அல்லது வரும் பண்டிக்கை காலங்களில் எதிர்பார்க்கலாம்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

ஃபார்ச்சூனரின் இரண்டாம் தலைமுறை கார் கடந்த 2016ல் வெளிவந்தது. அறிமுகமாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகிவிட்டதால் இதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் வகையில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வெளிப்புறத்தில் கவனிக்கத்தக்க விதத்தில் நுட்பமான மாற்றங்களை ஏற்றுள்ளதை காடிவாடி செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை பார்க்கும்போது தெரிகிறது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

ஏற்கனவே கூறியதுபோல் மறைப்பு எதுவுமின்றி காட்சியளிக்கும் இந்த சோதனை மாதிரி காரின் பின்புறத்தில் மாசு உமிழ்வு சோதனைக்காக கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் இது டொயோட்டா ஃபார்ச்சூனர் என்பது தெரிய கூடாது என்பதற்காக காரின் பின்புற டெயில்கேட்டில் வழங்கப்படும் FORTUNER என்ற வார்த்தை தடிமனான டேப்-ஆல் மறைக்கப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இதன் வெளிப்புறம் தாய்லாந்தில் அறிமுகமான ஃபார்ச்சூனர் மாடலை தான் பெரும்பான்மையாக ஒத்து காணப்படுகிறது. முன்புறத்தில் ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள இந்த சோதனை காரின் க்ரில்லில் இந்த ஹெட்லேம்ப் அமைப்பு க்ரோம் ஸ்ட்ரிப் வழியாக சரிந்து விழுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

க்ரில்லின் மேற்புறம் தற்போதைய மாடலில் இருந்து திருத்தியமைக்கப்பட்டுள்ளது. புதிய டிசைனிலான ஃபாக் விளக்கு ஹௌசிங், பெசல்ஸையும், முன்புற பம்பர், செங்குத்தான எல்இடி ஸ்ட்ரிப்பையும் கொண்டுள்ளன. இதனால் வளைவுகளில் கார் திரும்பும்போதும் காரின் முன்புற கீழ்பகுதி மற்ற வாகனங்களுக்கு தெளிவாக தெரியும்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இவற்றுடன் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்கள், க்ரோம்டு விண்டோ லைன், க்ரோம் கதவு ஹேண்டில்கள், கருப்பு நிறத்தில் சக்கர ஆர்ச் க்ளாடிங், சைடு ஸ்டெப்ஸ், திருத்தியமைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், கூர்மையான வெட்டுகள் & க்ரீஸஸ், காரின் அடிப்பகுதிகளை பாதுகாக்க ஸ்கிட் ப்ளேட், கருப்பு நிற பில்லர்கள் & ஓஆர்விஎம்கள், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் பெரிய அளவில் எந்த டிசைன் மாற்றமும் ஏற்காத பின்புற பம்பர் உள்ளிட்டவை இந்த சோதனை காரின் வெளிப்புறத்தை பார்க்கும்போது தெரியவரும் பாகங்களாகும்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

உட்புறத்தை ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜண்டர் என்ற இரு வெர்சன்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில் கொண்டிருந்தாலும், லெஜண்டர் தரமான தொழிற்நுட்ப தொகுப்பை பெற்றுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய வெர்சனின் உட்புறத்தை சவுகரியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான புதிய பாகங்களுடன் எதிர்பார்க்கலாம்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இந்த வகையில் இதன் கேபின் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4.2 இன்ச் மல்டி இன்ஃபோ திரையுடன் ஆப்டிட்ரான் மீட்டர், 360-டிகிரி கேமிரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கலாம்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

300 கிலோ அதிகரிக்கப்பட்டு காரின் மொத்த இழு திறன் 3,100 கிலோவாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் மூலம் அதிகப்பட்சமாக 3,100 கிலோ வரையிலான எடை கொண்ட வாகனங்களை இழுத்து செல்ல முடியும். காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமின்றி காரின் என்ஜின் அமைப்பும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இதனால் இதன் 2.8 லிட்டர் 1ஜிடி-எஃப்டிவி இன்லைன்-4 சிலிண்டர் டீசல் என்ஜின் இந்த பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு அதிகப்பட்சமாக 204 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனை வழங்கும். அதுவே இதே டீசல் என்ஜின் தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் காரில் 177 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்துகிறது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இதன் 2.7 லிட்டர் 4-சிலிண்டர் இன்லைன் பெட்ரோல் என்ஜின் 166 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை காருக்கு வழங்கும். இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் வழங்க்கப்படும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போதும்...

இதனால் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் அப்படியே இந்த ஃபேஸ்லிஃப்ட் காரிலும் தொடரவுள்ளன. 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை ரூ.29 லட்சத்தில் இருந்து ரூ.36 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Fortuner Facelift Spied On Test In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X