டொயோட்டா செய்த நல்ல காரியம்... மூக்கின் மேல் விரல் வைத்த மக்கள்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க

டொயோட்டா நிறுவனம் இந்தியாவிற்கு ஏராளமான நன்மைகளை செய்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்களும், காயங்களும் அதிக எண்ணிக்கையில் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும், 1,51,417 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் மரணமடைகின்றனர்.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில் வாகன ஓட்டிகள் காட்டும் அலட்சியமே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. வெளிப்படையாக சொல்வதென்றால், இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதே கிடையாது. ஒவ்வொருவரும் தினமும் ஏதேனும் ஒரு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு கொண்டேதான் உள்ளனர்.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணிப்பது, குடிபோதையிலும், அதிக வேகத்திலும் வாகனங்களை இயக்குவது, மொபைல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறி செல்வது மற்றும் வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்வது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களில்தான் வாகன ஓட்டிகள் அதிகமாக ஈடுபடுகின்றனர்.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

எனவே இந்தியாவில் வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

இதுதவிர சாலை பாதுகாப்பு வாரம் போன்ற நடவடிக்கைகள் மூலமும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், 31வது சாலை பாதுகாப்பு வாரம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த ஜனவரி 11ம் தேதி தொடங்கியது.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

நாளையுடன் (ஜனவரி 17) 31வது சாலை பாதுகாப்பு வாரம் முடிவடைகிறது. இதனிடையே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமானது, கர்நாடக மாநில போக்குவரத்து போலீசாருக்கு 525 ஹெல்மெட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. குடிமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில போக்குவரத்து போலீசாருக்கு, 525 ஹெல்மெட்களை வழங்கியதுடன் மட்டுமல்லாது மேலும் ஒரு சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

கர்நாடக மாநிலம் பிடாடி பகுதியில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பிளாண்ட் உள்ளது. இங்கு சாலை பாதுகாப்பு பேச்சு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் டிரைவர்களுக்கான கண் பரிசோதனைகள் ஆகியவற்றை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் நடத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

முன்னதாக சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஹெல்மெட் அணியாதது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, மும்பை போக்குவரத்து போலீசார் ரோஜா பூக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து போலீசாருடன் தன்னார்வலர்களும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.

சூப்பர்... இந்தியாவிற்கு டொயோட்டா செய்யும் நல்ல காரியம்... என்னவென்று தெரியுமா?

அத்துடன் இனி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவேன் என வாகன ஓட்டிகள் அனைவரையும் மும்பை போக்குவரத்து போலீசார் அங்கேயே உறுதிமொழி எடுக்க வைத்தனர். இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2020, 10:00 [IST]
English summary
31st Road Safety Week: Toyota Donates 525 Helmets To Karnataka Traffic Police. Read in Tamil
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+