சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 1984 மாடலான டபிள்யூ123 செடான் தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையான தோற்றத்தை பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

இந்தியாவில் மிக பிரபலமான லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. ஏனெனில் லக்சரி கார்களை வாங்க நினைப்போரின் முதன்மையான தேர்வுகளில் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்களும் அடங்கி இருக்கும்.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

லேட்டஸ்ட் தயாரிப்புகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறதோ அந்த அளவிற்கு இந்நிறுவனத்தின் பழமையான மாடல்களும் கிளாசிக் கார்களாக வாடிக்கையாளர்களின் மனதில் இன்றளவும் நிலைத்துள்ளது. அவ்வாறான பழமையான மெர்சிடிஸ் தயாரிப்புகளில் ஒன்றான 1984 டபிள்யூ123 செடான் கார் தான் தற்போது மாடர்ன் கார்களுக்கு இணையான தோற்றத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து டஜிஷ் பி என்பவர் தனது யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ, டபிள்யூ123 காரின் வரலாற்றை கூறியப்படி ஆரம்பிக்கிறது. இந்த பழமை வாய்ந்த காரை மும்பையில் இருந்து கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் முதலில் வாங்கியுள்ளார். தற்போதைய உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக்கியுள்ளார்.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

டபிள்யூ123 செடான் கார் பற்றி கூற வேண்டுமென்றால் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் என்றவுடனே மனதில் தோற்றம் கார்களில் ஒன்று. இதில் இருந்து விற்பனையான சமயத்தில் இந்த செடான் கார் எந்த அளவிற்கு பிரபலமான இருந்துள்ளது என்பதை அறியலாம்.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

தற்போது இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை புத்துயிர் பெற வைத்திருப்பது கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள விண்டேஜ் கார் கேரேஜ் என்ற நிறுவனம் ஆகும். இந்த காரில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள ஹெட்லேம்ப், டெயில்லேம்ப், மெர்சிடிஸின் நட்சத்திர முத்திரை உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

ஒரிஜினல் தயாரிப்பு பாகங்களான இவை சவுதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய பாகங்களால் நேர்த்தியான வெளிப்புறத்தை பெற்றுள்ள இந்த காரின் மேற்புறத்தில் தூசி படர்வதை தவிர்க்கும் விதமாக ஆண்டி-ரஸ்ட் பூச்சு உரிமையாளர் கேட்டு கொண்டதற்கு இணங்க வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

முன் மற்றும் பின்புற க்ரோம் பம்பர்கள் ஒரிஜினலாக பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் சக்கர மூடிகள் காரின் பெயிண்ட் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக வெளிப்புறத்தை மிகவும் நேர்த்தியான தோற்றத்தில் கார் பெற்றுள்ளது. உட்புறத்தில் மிக பெரிய அளவில் எந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

உட்புறத்தின் பழமையை தொடர உரிமையாளர் நினைத்திருக்கலாம். அதுமட்டுமின்றி பவர் ஜன்னல் கண்ணாடிகள், பவர் ஸ்டேரிங் சக்கரம், ஏர்கான் வெண்ட்ஸ் மற்றும் குஷின் இருக்கைகள் போன்ற மாடர்ன் வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது. இது கூட உரிமையாளரை மாற்ற விடாமல் செய்திருக்கலாம்.

சுமார் 35 வருடத்திற்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற 1984 மெர்சிடிஸ் டபிள்யூ123 செடான்...

டபிள்யூ123 செடான் காரின் 300டி மாடலான இதில் 3.0 லிட்டர், 5-சிலிண்டர் டீசல் என்ஜின் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதன்படி பார்க்கும்போது இந்த கார் 6 லட்சத்தில் ஷோரூமில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மறுசீரமைப்பு பணிக்கே 4 லட்சம் அளவில் செலவாகி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 27, 2020, 23:13 [IST]
English summary
Meet the 35 year-old Mercedes Benz W123 that looks brand new [Video]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+