சினிமா பிரபலங்கள் மத்தியில் திடீரென பிரபலமாகும் புதிய கார்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
சினிமா பிரபலங்கள் மத்தியில் புதிய கார் ஒன்று திடீரென பிரபலமாகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் மிக குறுகிய காலத்தில் வெகு வேகமாக பிரபலம் அடைந்துள்ளது. இதற்கு கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த செல்டோஸ் கார்தான் முக்கியமான காரணம். இது எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் செல்டோஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் மத்தியில் கியா செல்டோஸ் எஸ்யூவி, இந்த அளவிற்கு பிரபலம் அடைய பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், கியா செல்டோஸ் காரின் அட்டகாசமான தோற்றம், அதில் வழங்கப்படும் வசதிகள், வெரைட்டியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் ஆகியவை மிகவும் முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி மிகவும் பிரபலமான மனிதர்கள் மத்தியிலும் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் தற்போது வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. குறிப்பாக கேரளாவை சேர்ந்த நடிகர்கள் வரிசையாக கியா செல்டோஸ் காரை வாங்கி வருகின்றனர். இந்த வகையில் கியா செல்டோஸ் காரை சமீபத்தில் சொந்தமாக்கிய நடிகர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

ஆண்டனி வர்கீஸ்
மலையாள திரையுலகில் மிகவும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆண்டனி வர்கீஸ் உருவெடுத்துள்ளார். இவர் சமீபத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவியை வாங்கியுள்ளார். இந்த காரை அவர் டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மற்றும் இதர சமூக வலை தள பக்கங்களிலும் பகிரப்பட்டிருந்தது.

கியா செல்டோஸ் எஸ்யூவி காரின், ஜிடி லைனை (GT Line) நடிகர் ஆண்டனி வர்கீஸ் தேர்வு செய்துள்ளார். டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் கியா செல்டோஸ் காரின் ஜிடி லைன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கைலாஷ்
மலையாள திரையுலகில் இருந்து கியா செல்டோஸ் எஸ்யூவி காரை வாங்கிய மற்றொரு நடிகர் கைலாஷ். ஆனால் இவர் கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டை தேர்வு செய்யவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் படங்களை வைத்து பார்க்கையில், இவர் வாங்கிய வேரியண்ட்டின் பனி விளக்கு மற்றும் ஹெட்லேம்ப் டிசைன், டாப் வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமாக உள்ளது.

எம்.ஏ.நிஷாத்
மலையாள திரை உலகை சேர்ந்த செலிபிரிட்டி எம்.ஏ.நிஷாத். ஆனால் இவர் நடிகர் கிடையாது. இவர் ஒரு இயக்குனர். இவரும் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரை சமீபத்தில் வாங்கியுள்ளார். அவர் காரை டெலிவரி எடுக்கும் படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.

பிபின் ஜார்ஜ்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், கதாசிரியராகவும் பிபின் ஜார்ஜ் உள்ளார். இவரும் கூட சமீபத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். அந்த படங்களை வைத்து பார்க்கையில், இவர் டாப் வேரியண்ட்டை தேர்வு செய்திருப்பது தெரிகிறது. இதில், ஆல் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஐஸ் க்யூப் வடிவ பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இனி கியா செல்டோஸ் காருக்கு வருவோம். 3 இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடன் கியா செல்டோஸ் எஸ்யூவி கிடைக்கிறது. இதில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் பொதுவாக 3 இன்ஜின்களுடனும் கிடைக்கிறது. கியா செல்டோஸ் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக கியா செல்டோஸ் காரில், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜின் உடன் மேனுவல் அல்லது டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. மூன்றாவதாக 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் கியா செல்டோஸ் காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவர் மற்றும் 242 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது டிசிடி ஆப்ஷன்கள் இந்த இன்ஜின் உடன் வழங்கப்படுகின்றன.

இந்த இன்ஜின்கள் அனைத்தும் பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமானவைதான். கியா செல்டோஸ் கார் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதும் வாடிக்கையாளர்களை கவர மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. செல்டோஸ் எஸ்யூவி மூலம் முதல் தயாரிப்பிலேயே இந்திய மார்க்கெட்டில் தனி முத்திரையை கியா நிறுவனம் பதித்துள்ளது.


Click it and Unblock the Notifications