கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடிஜி-யின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் நம்ம இந்திய கார்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

உலக பொருளாதாரத்தை சீட்டு கட்டு போல கொரோனா வைரஸ் (கோவிட்-19) சரிய வைத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது பொருளாதார ரீதியிலான நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனினும் தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

இதன் ஒரு பகுதியாக உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். அதாவது இறக்குமதி செய்த பொருட்களுக்கு பதில் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது பிரதமரின் வேண்டுகோள். ஆனால் மோடியே இதனை பின்பற்றுகிறாரா? என்பது சந்தேகமே.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி மட்டுமல்லாது, இந்திய அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள பலரும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வெளிநாட்டு நிறுவன கார்களை பயன்படுத்துவதை நம்மால் பார்க்க முடிந்துள்ளது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி (BMW 7-Series High Security), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் சென்டினல் (Land Rover Range Rover Sentinal) மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) ஆகிய கார்கள் இதில் முக்கியமானவை. இந்த கார்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை நம்மால் பலமுறை பார்க்க முடிந்துள்ளது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

இந்த கார்களில் உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் மிகவும் உயரிய பொறுப்பை வகிக்கும் நபர் என்பதால், உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசியமான ஒன்றுதான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால் குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரைதான் மோடி பயன்படுத்தி வந்தார்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

உள்நாட்டு தயாரிப்பான இது, மோடிக்கு ஏற்ற வகையில் கவச காராக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை தனது அலுவல் காராக அவர் மாற்றி கொண்டார். அந்த சமயத்தில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பிற்காக, 'மேட் இன் இந்தியா' காரை புறக்கணிக்க வேண்டாம் என ஆனந்த் மஹிந்திரா தனது கடிதத்தில் கேட்டு கொண்டார். வேண்டுமானால் ஸ்கார்பியோ காரை, இன்னும் பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக மேம்படுத்தி தருகிறோம் எனவும் மஹிந்திரா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

இந்த சூழலில், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்போம் என்று பிரதமர் மோடி தற்போது கூறியிருப்பதால், அவர் 'மேன் இன் இந்தியா' கார்களுக்கு மாறுவாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன. இது தொடர்பாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிடுவதையும், மீம்ஸ்கள் உலா வருவதையும் தற்போது காண முடிகிறது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

இதனால் பிரதமர் மோடியால் பயன்படுத்தப்படும் பிஎம்டபிள்யூ, லேண்ட் ரோவர், டொயோட்டா கார்களுக்கு மாற்றாக இருக்கும் சில 'மேட் இன் இந்தியா' தேர்வுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மண்ணில் தயாரித்து வரும் கார்களை நாங்கள் இங்கே கருத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை அருமையான சர்வதேச மாடல் என்று சொல்லலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார், உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது. இதற்கு இந்த காரின் முரட்டுத்தனமான தோற்றமும் ஒரு காரணம்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

இது 7 சீட்டர் கார் ஆகும். காருக்கு உள்ளே விசாலமான இடவசதி கிடைக்கிறது. அத்துடன் தேவையான அளவு சக்தி கொண்ட டீசல் இன்ஜினை, மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடியது. அதிவேகத்தில் பயணம் செய்ய இது போதுமான ஒன்றுதான். இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

மஹிந்திரா ஸ்கார்பியோ

மிகவும் புகழ்பெற்ற எஸ்யூவி ரக கார்களில் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்பியோ, இந்திய மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகிறது. அத்துடன் மிகவும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்திய அரசியல்வாதிகள் பலர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

ஆஃப் ரோடு திறன்களில் தலைசிறந்து விளங்குவதால், கார் ஆர்வலர்கள் நேசிக்கும் மாடல்களில் ஒன்றாகவும் மஹிந்திரா ஸ்கார்பியோ சிறப்பு பெறுகிறது. இது மிகவும் சுத்தமான இந்திய தயாரிப்பு. மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது, அவரது அலுவல் காராக இருந்தது மஹிந்திரா ஸ்கார்பியோதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

டாடா ஹாரியர்

2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் கார், நடப்பு 2020ம் ஆண்டில் அப்டேட் செய்யப்பட்டது. மஹிந்திரா ஸ்கார்பியோவை போலவே இதுவும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். புத்தம் புதிய ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில் ஹாரியர் காரை டாடா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் எஸ்யூவி காராகும்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

டாடா ஹாரியர் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் பாக்ஸ் உடன் டாடா ஹாரியர் கார் கிடைக்கிறது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

டாடா ஹாரியர் கார் சாலையில் வரும்போது நிச்சயமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அத்துடன் உயர் பொறுப்புகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் இந்த கார் நன்றாக பொருந்தும். அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா ஹாரியர் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகிவிட்டது.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

மாருதி சுஸுகி சியாஸ்

அரசு அதிகாரிகள் பலரின் அதிகாரப்பூர்வ வாகனமாக மாருதி சுஸுகி சியாஸ் தற்போது இருந்து வருகிறது. செடான் செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமான மாடலாக உள்ள மாருதி சுஸுகி சியாஸ், விசாலமான இட வசதியை வழங்குகிறது. இது முற்றிலும் 'மேட் இன் இந்தியா' கார். பிரதமரின் கவச செடான்களுக்கு இது சிறப்பான மாற்று தேர்வாக இருக்க முடியும்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

பாதுகாப்பு?

பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யும் காரை தேர்வு செய்வதற்கு முன் பாதுகாப்பை பற்றி யோசிப்பதே முக்கியமானது. அவர் இந்தியாவின் மிக மிக முக்கியமான நபர். ஆனால் எந்தவொரு வாகனம் என்றாலும், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை பொருத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவை காரில் பயணம் செய்பவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி பயன்படுத்திய மஹிந்திரா ஸ்கார்பியோ கூட, இப்படிப்பட்ட கவச வசதிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டதாகதான் இருந்தது. உலகின் ஒரு சில நாடுகளின் தலைவர்கள், தங்கள் உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவை கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.

கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடியின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்...

இந்த வகையில் இந்தியாவின் மிக முக்கிய நபரான பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான கார்களை இந்திய நிறுவனங்களாலும் தயாரிக்க முடியும் என்பது உறுதி. ஆனால் அதற்கு பிரதமரும், அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் மனது வைக்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
4 Indian Alternatives For Prime Minister Narendra Modi's BMWs & Range Rovers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X