விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருவதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பெரிதாக அதிகரிக்காத நிலையிலேயே, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

1. ஏராளமான வசதிகள்:

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்ற பெருமை டாடா நெக்ஸானுக்கு உண்டு. சன்ரூஃப், ஃபாலோ மீ ஹோம் வசதியுடன் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 7 இன்ச் ஹார்மன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

2. சவாலான விலை

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 13.99 லட்ச ரூபாயில் இருந்து 16.25 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கிறது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

3. பாதுகாப்பு

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் விபத்து நிகழ்ந்தால், பயணிகளை பயணிகளை பாதுகாக்கும் வகையில், வலுவான மற்றும் தரமான கட்டுமான தரத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

அத்துடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், ஐபி67-க்கு இணக்கமான பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த சாலைகளிலும், தூசி நிறைந்த சூழல்களிலும் காரை ஓட்ட இது அனுமதிக்கிறது. மேலும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவின் கடினமான நிலப்பரப்புகளில் 10 லட்சம் கிலோ மீட்டர்கள் சோதனை செய்துள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

மிகவும் உயரமான இடங்கள், செப்பனிடப்படாத சாலைகள், செங்குத்தான சாய்வு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மிகவும் மோசமான வானிலைகளில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை சோதனை செய்துள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

4. பேட்டரி, சார்ஜிங்:

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 30.2kWH பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் உள்ளது. CCS2 ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... ஏன் என்பதற்கான 4 காரணங்கள்...

பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இயக்குவதற்கு குறைவான செலவே ஆகும் என்பதால், எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனவே நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை தொடர்ந்து, இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. இதில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மிகவும் முக்கியமானது.

Most Read Articles

English summary
4 Reasons That Explain Why Tata Nexon EV Is So Successful In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X