இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷன் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை நீட்டித்து, மூன்று வரிசை கொண்ட மாடல்களாக அறிமுகம் செய்யும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கடந்த பல மாதங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே ஹெக்டர் ப்ளஸ் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் 7 சீட்டர் மாடலான கிராவிட்டால், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனமும் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வந்தது.

இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

இதன்பின் தனது செக்மெண்ட்டில் கியா செல்டோஸை வீழ்த்தி, அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. இந்த சூழலில், ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் இந்தியாவில் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது முதல் முறையாக தற்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 டிசைன், பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கு? வீடியோ பாருங்க...

இதற்கு முன்னதாக ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் மண்ணான தென் கொரியாவில் இந்த புதிய மாடலின் புரோட்டோடைப்கள் கேமரா கண்களில் சிக்கியிருந்தன. அதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. ஹூண்டாய் கிரெட்டாவின் மூன்று வரிசை வெர்ஷன் அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷனில், வீல் பேஸ் நீளம் 2,610 மிமீ என அப்படியே இருப்பது போலதான் தெரிகிறது. ஆனால் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்காக ஒட்டுமொத்த நீளம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன் பக்க க்ரில் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் மற்றும் பம்பர் பகுதி ஆகியவை 5 சீட்டர் மாடலில் இருந்து தக்க வைக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது.

இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் மாடலில், ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி வசதியுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

அத்துடன் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல், 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் ஹூண்டாய் கிரெட்டாவின் 7 சீட்டர் வெர்ஷனில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் இதன் விலை உயர்ந்த வேரியண்ட்களில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம்.

இந்திய சாலைகளில் சோதனை... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய கார்... ஓஹோ அதுதான் இதுவா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும். இதுகுறித்து டீம்-பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா இந்தியாவில் அதிகமாக விற்பனையாக கூடிய எஸ்யூவியாக உள்ள நிலையில், அதன் 7 சீட்டர் வெர்ஷன் வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
7-Seater Hyundai Creta Spy Pics. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X