Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?..
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் சில சாலையோரத்தில் கைவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவில் சூப்பர் கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவு இந்திய சந்தைகளில் அரிதினும் அரிதாக தெண்பட்ட சொகுசு கார்களின் தரிசனம் தற்போது அதிககரித்துக் காணப்படுகின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் சொகுசு கார்களின் மீதான மோகம் அதிகரித்திருப்பதே முக்கிய காரணம் ஆகும்.

இதுமட்டுமின்றி சூப்பர் கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் சிலர், சில தனித்துவமான கார்களை வெளிநாடுகளில் இருந்தும்கூட இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இறக்குமதி செய்யப்பட்ட சில கார்கள் சாலையோரத்தில் இருப்பதாக தற்போது எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

டீம் பிஎச்பி உறுப்பினர்கள் வெளியிட்ட தகவல் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. பல கோடி ரூபாய்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் கேட்பாரற்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர வழங்கியிருக்கின்றது.

என்ன மாதிரியான கார்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதையே இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம். பல மடங்கு விலைக் கொண்ட லக்சூரி கார்களைக் கைவிடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதுகுறித்த தகவலையும் இப்பதிவில் நாம் காணலாம். முன்னதாக கைவிடப்பட்ட கார்களைப் பற்றி பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் எஸ்320:
மும்பையின் சாலையில் இந்த கார் கைவிடப்பட்டிருக்கின்றது. இது ஓர் மூன்றாம் தலைமுறை பென்ஸ் எஸ் கிளாஸ் காராகும். இந்த கார் தற்போதும் பார்ப்பதற்கு சிறப்பான கன்டிஷனில் தெண்படுகின்றது. ஆனால், இதன் ஏர் சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை என கூறப்படுகின்றது. இது சற்று விலையுயர்ந்த அம்சம் என்பதனால் இதனைச் சீர் செய்யாமல் அதன் உரிமையாளர் கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. சஸ்பென்ஷன் உடைந்திருப்பதால் காரின் ஒட்டுமொத்த உடலும் டயருடன் அமர்ந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

ஆடி க்யூ 7
ஆடி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் க்யூ 7 -ம் ஒன்று. இந்த காரும் சாலையோரத்தில் கைவிடப்பட்டிருக்கின்றது. இந்த காரும் மும்பை நகரத்திலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கார் குறித்து டீம் பிஎச்பி பயனர் கூறியதாவது,"இக்காரின் ஏர் சஸ்பென்ஷன்கள் உடைந்திருக்கின்றன. இதைத் தவிர வேறெந்த பிரச்னையும் இக்காரில் இல்லை. சிறு ஸ்கிராட்ச், சொட்டைகளைக் கூட இக்காரில் காண முடியவில்லை" என தெரிவித்துள்ளார். இந்த கார் ஆறு ஆண்டுகள் பழைய காராகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்:
இக்கார் கேரள மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்காரிலும் சஸ்பென்ஷனில் ஏற்பட்ட கோளாறின் காரணமாகவே கைவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கார் நீண்ட நாட்களாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் பல்வேறு பாகங்கள் துறு மற்றும் பாசி பிடித்த நிலையில் காட்சியளிக்கின்றது.

ஜீப் செரோக்கி:
அமெரிக்க நிறுவனத்தின் அதிக புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஜீப் செரோக்கியும் ஒன்று. இக்கார் சற்று பழைய தலைமுறை மாடலாகும். உருவம் மற்றும் ஸ்டைலை வைத்து பார்க்கையில் இக்கார் இரண்டாம் தலைமுறை ஜீப் செரோக்கி என யூகிக்கப்படுகின்றது. இதனை உபி மாநிலம் நொய்டாவில் கண்டெடுத்துள்ளார் டீம் பிஎச்பி பயனர்.

வெகு நீண்ட நாட்களாக கேட்பாரற்று இக்கார் இருப்பதாக சற்று வேதனையுடன் அவர் தெரிவித்திருக்கின்றார். இக்காரை கைவிட்டதற்கான காரணம் தெரிய வரவில்லை. இது தற்போதும் இயங்கும் கன்டிஷனில் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. அதாவது, இதன் டயர் மற்றும் தோற்றத்தை வைத்து பார்க்கையில் எஞ்ஜின் அல்லது பிற ஏதேனும் முக்கிய கூறு ஒன்றில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இது கைவிடப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 5 செரீஸ்:
பார்பதற்கு துருப் பிடித்து மிக பழையக் காரைப் போன்று காட்சியளிக்கும் இக்கார் மிக பழைய கார் இல்லை என்பதே முக்கியமான தகவல். ஆமாங்க, மழை மற்றும் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இக்கார் இந்தளவு பழையதைப் போன்று காட்சியளிக்கின்றது. பேன்சி பதிவெண்ணுடன் காட்சியளிக்கும் இக்கார் கேரள மாநிலம் கொடுங்கள்ளூர் எனும் பகுதியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக இக்கார் கைவிடப்பட்டிருக்கின்றது என்கிற தகவல் தெரியவில்லை. இருப்பினும், ஒரு வாட்டர் வாஷ் விட்டால் இக்கார் புதியதைப் போன்று தெண்படும் என்பது மட்டும் தெளிவாக தெரிய வந்துள்ளது.

மேலே பார்த்த பல கார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களாகும். இக்கார்களில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளைச் சரி செய்ய பெரும் தொகை செலவாகும் என்கிற காரணத்தினாலேயே கைவிடப்பட்டிருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. அதாவது, இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கான உதிரிபாகங்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆகையால், அவற்றையும் இறக்குமதி செய்தே பயன்படுத்த வேண்டும். இதற்கு பெரும் தொகை செலவாகும் என்கிற காரணத்தினால், பயன்படுத்தியது வரை போதும் என அதன் உரிமையாளர்கள் கைவிட்டிருக்கலாம் என வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.