கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

கொரோனா கழுத்தை நெருக்கி வரும் நிலையில், கார், பைக் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களுக்கு அதிரடியான ஆஃபர் ஒன்றை அக்கோ காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த சூழலில், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சில விதி தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

வங்கிகளில் கார், பைக்குகளுக்கான மாதத் தவணையை மூன்று மாதங்கள் தள்ளி வைத்துக் கொள்வதாக வங்கிகள் அறிவித்தன. ஆனால், மூன்று மாதங்களுக்கான கூடுதல் வட்டியை அசலுடன் சேர்த்து கட்ட வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

இந்த சூழலில், கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை இந்த நிதி ஆண்டில் உயர்த்தப்போவதில்லை என்று மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

அத்துடன், வரும் வாகன காப்பீட்டை புதுப்பிதற்கான கால அவகாசமும் வரும் 21ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

இந்த நிலையில், தனிப்பட்ட நிறுவனங்கள் சார்பிலும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் முன்னணி வாகன காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் அக்கோ நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

அதன்படி, காப்பீட்டை புதுப்பிக்கும் தனது பழைய வாடிக்கையாளர்கள் அல்லது புதிதாக தனது நிறுவனத்தில் வாகன காப்பீடு எடுப்பவர்களுக்கு காப்பீட்டில் ஒரு மாதம் கூடுதல் காலம் போனசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

பொதுவாக வாகனங்களுக்கான காப்பீடு ஓர் ஆண்டுக்கு செல்லத்தக்க வகையில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அக்கோ நிறுவனத்தின் அறிவிப்பின்படி, தற்போது கார், பைக் பாலிசியை புதுப்பித்தாலும், புதிதாக எடுத்தாலும் 13 மாதங்களுக்கான காப்பீடு காலம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கார், பைக் காப்பீட்டுக்கு ஒரு மாதம் போனஸ்... அக்கோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!

அதாவது, கூடுதல் கட்டணமில்லாமல் ஒரு மாதம் கூடுதல் காலத்திற்கான காப்பீட்டை கார், பைக் உரிமையாளர்கள் பெற முடியும். நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 2, 2020 முதல் மார்ச் 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் பாலிசிக்கு இது பொருந்தும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 7, 2020, 17:50 [IST]
English summary
Acko has announced that the company will give 1 month free policy extension period for auto insurance customers due to the corono virus impact.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+