Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விளம்பர வீடியோவில் புதிய ஹூண்டாய் டூஸான் காரை ஓட்டும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?
புதிய டூஸான் எஸ்யூவிக்கு ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், பிரபல நடிகர் ரன்தீப் ஹூடா அதனை ஓட்டியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில், ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Tucson Facelift) வெளியிடப்பட்டது. அதன்பின் இந்த எஸ்யூவி கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அடுத்த தலைமுறை மாடலை இந்தியா பெறவில்லை என்று ஒரு சில வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

எனினும் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஹூண்டாய் டூஸான் அழகான எஸ்யூவி என்பதில் சந்தேகமில்லை. இதன் ஆரம்ப விலை 22.30 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 27.03 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

தற்போதைய நிலையில் டூஸான் எஸ்யூவி கார்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் முதன்மையான மாடலாக உள்ளது. இந்த சூழலில் புதிய டூஸான் எஸ்யூவிக்கு சிறிய விளம்பர வீடியோ ஒன்றை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், நடிகரும், கார் ஆர்வலருமான ரன்தீப் ஹூடா (Randeep Hooda) இடம்பெற்றுள்ளார்.

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் டிசைன் மற்றும் ஒரு சில பிரீமியம் வசதிகளை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் நுட்பமான ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப்களில் தற்போது எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பனி விளக்குகளை சுற்றிலும் எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

18 இன்ச் அலாய் வீல்களுக்கும் புதிய டிசைன் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி டெயில்லைட்களும் அருமையாக இருக்கின்றன. காரின் உள்ளேதான் பெரும்பாலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேபின் முழுமையாக கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பிரீமியமாக உள்ளது. அத்துடன் டேஷ்போர்டு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 8 ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம், ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ட்யூயல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும், புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் இடம்பெற்றுள்ளன. டிரைவிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி வசதிகளுக்கு பஞ்சமே இல்லை என்னும் அளவிற்கு ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி சிறந்து விளங்குகிறது.
புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டூஸான் எஸ்யூவி சற்று விலை உயர்ந்த மாடலாக உள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற எஸ்யூவி கார்களான கிரெட்டா மற்றும் வெனியூ ஆகியவை விற்பனையில் தலைசிறந்து விளங்குகின்றன.