சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்

மிக சாதாரண வேன்களை உல்லாச கப்பல்களுக்கு இணையாக மாடிஃபை செய்து இந்திய நடிகர்கள் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகள் பலர் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போனவர்கள் என்பது நாம் அனைவரும் ஒன்றே. இவர்களின் சொகுசு வாழ்க்கையைக் கண்டு மயங்காத யாரும் இருக்க முடியாது. ஏன், ஒரு சில தொழிலதிபர்களுக்கே இவர்களின் பகட்டு வாழ்க்கையைக் பொறாமை ஏற்படலாம். குறிப்பாக, நடிகர்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்த வாகனங்கள் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

அந்தவகையில், கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரையிருக்கும் அனைத்து நடிகர்களும் குறைந்தது ஒரு விலையுயர்ந்த காரையாவது பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இதில், ஒரு சிலர் மட்டும் ஒரு படி மேலே சென்று, சற்று வித்தியாசமாக தங்களிடம் இருக்கும் விலையுயர்ந்த ஆடம்பர கார்களை விட்டுவிட்டு மினி வேன்களை வாங்கி, அதனை உல்லாச கப்பல்களுக்கு இணையாக மாடிஃபை பயன்படுத்துகின்றனர்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

படப்பிடிப்பின்போது ஓய்வு எடுக்கவும், ப்ரஷ் அப் ஆவதற்கும் இந்த வேன்களையே அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நேரங்களில் அவற்றை மினி மீட்டிங் ஸ்பாட்டாகவும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு, மாடிஃபை செய்யப்படும் வேன்கள் அனைத்தும் பல லட்சம் ரூபாய் செலவில் கஸ்டமைஸ் செய்யப்படுகின்றன.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

ஆகையால், பல நட்சத்திர விடுதிகளில் காணக்கிடைக்காத அம்சங்கள்கூட, அந்த வேன்களில் எளிதில் கிடைத்துவிடுகின்றது. இதனாலயே ஒரு சில நேரங்களில் லட்சங்களைக் கடந்து கோடிகளைத் தொட்டுவிடுகின்றது மாடிஃபிகேஷன்களுக்கான செலவு.

அந்தவகையில், யாரிடத்தில் எல்லாம் இம்மாதிரியான மாடிஃபை செய்யப்பட்ட வேனிட்டி வேன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

இதில் பெரும்பாலான வாகனங்கள் டிசி மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் கை வண்ணத்திலேயே கஸ்டமைஸ் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பழமையான வாகன கஸ்டமைஸ் நிறுவனம் ஆகும். இது சமீபத்தில்தான் அதன் பெயரை டிசி2 மாற்றி, புது அவதாரம் எடுத்தது.

சரி வாருங்கள் பதிவிற்குள் சொல்லலாம்...

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

ஷாருக்கான்

உண்மையில் இந்திய திரையுலகில் ராஜ வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்களில் ஷாருக்கான் முதன்மை இடத்தில் இருக்கின்றார். இவர் ஓர் சொகுசு வாகன பிரியர் ஆவார். இவரிடத்தில் பல விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதைத்தவிர சூட்டிங் ஸ்பாட்டுகளில் பயன்படுத்த ஏதுவாக வால்வோ பி9ஆர் பேருந்தை அதிக சொகுசு வசதியுள்ள வாகன மாற்றியமைத்துள்ளார்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

இந்த பேருந்தில் லக்சூரி வீடுகளுக்கு இணையாக அனைத்து அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக டிவி, மீட்டிங் செய்வதற்கான இட வசதி, மினி அலுவலகம், குளியல் மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதில் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இவர் ஹூண்டாய் க்ரெட்டா மாடலின் புதிய தலைமுறை காரை வாங்கினார்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

அக்சய் குமார்

பாலிவுட் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை வழங்கியவர் அக்சய் குமார். இவரும் லக்சூரி வாகன பிரியராக இருந்து வருகின்றார். இதன்காரணமாகவே அதிக சொகுசு வசதியுடைய வேன் ஒன்றை தனி பயன்பாட்டிற்காக மாடிஃபை செய்துள்ளார்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

இதனை சூட்டிங் ஸ்பாட் மட்டுமின்றி நெடு நீண்ட தூர பயணங்களுக்கும் அவர் பயன்படுத்தி வருகின்றார். அந்த வேனில் மினி படுக்கையறை இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, மேக்-அப் ரூம் போன்ற அத்தியாவசிய வசதிகளும் அந்த வேனில் இடம்பெற்றிருக்கின்றது.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

அலியா பாட்

பாலிவுட் திரையுலகின் அழகி நடிகை என்ற இளைஞர்களால் போற்றப்படுபவர் அலியா பாட். இவரும் இந்தி திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். இவர், சூட்டிங் ஸ்பாட்டில் பயன்படுத்துவதற்காக வேனிட்டி வேனை பயன்படுத்தி வருகின்றார். அதில், சிறிய படுக்கையறை உடன் கூடிய குளியல் மற்றும் கழிவறை வசதி இருக்கின்றது. இத்துடன், மேக் செய்வதற்கான தனி இடமும் அதில் இருக்கின்றது. இவரின் படுக்கையறையில் சில கிராஃப்ட் ஓவியங்கள் புகுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

சல்மான் கான்

சல்மான் கான், டிசி டிசைன் நிறுவனத்தின் கை வண்ணத்தில் பல்வேறு சொகுசு வசதிகளை அவரது பேருந்தில் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக, இந்த பேருந்தில் மினி படுக்கையறை, குளியல் அறை போல் உள்ளிட்டவை முக்கிய அம்சமாக நிறுவப்பட்டிருக்கின்றன. இதுதவிர, எல்இடி டிவி, லக்சூரியஸ் கேபின், எலெக்ட்ரிக் மசாஜ் இருக்கை உள்ளிட்ட பிரிமியம் வசதிகளும் அதில் புகுத்தப்பட்டுள்ளன.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

ரன்பீர் கபூர்

பாலிவுட் திரையுலகின் இளம் மற்றும் துடிப்பான நடிகர்களில் ரன்பீர் கபூர் ஒருவர். இவருக்கு பெண் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரும் சொந்தமாக ஓர் வேனிட்டி வேனை பயன்படுத்தி வருகின்றார். அதில், டிவி மற்றும் மியூசிக் சிஸ்டம் என ஏராளமான பிரிமியம் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பேட்மேன் சித்திரங்கள் அந்த வேன் முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

ஹ்ரித்திக் ரோஷன்

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஹ்ரித்திக் ரோஷனும் ஒருவர். இவரிடத்தில் பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், சூட்டிங் ஸ்பாட்டில் சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக சாதாரண வேனை உல்லாச கப்பலாக சில லட்சங்கள் செலவில் மாற்றியுள்ளார்.

சுமார் 12 மீட்டர் நீளமுடைய அந்த வேனில் இடம்பெறாத வசதிகளே இல்லை என கூறப்படுகின்றது.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

சனம் கபூர்

பாலிவுட் திரையுலகின் மாடர்ன் பெண்ணாக இருக்கின்றார் சனம் கபூர். இந்த நிலைப்பாட்டிற்கு ஏற்பவே அவரது வேனிட்டி வேனும் மாடர்ன் ஸ்டைலிலான இன்டீரியரைப் பெற்றிருக்கின்றது. அதில், பெரிய இருக்கை அமைப்பு, பெட்ரூம், மேக்-அப் அறை உள்ளிட்டவை இருக்கின்றன. இத்துடன் சிறிய சமையலறையும் அந்த வேனில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், பார்களில் இருப்பதைப் போன்று கண்கவர் வண்ண மின் விளக்குகளும் வேனில் உட்பகுதியில் உள்ளது. இது தேவையான நேரங்களில் மினி பார்ட்டி அறையாக மாற்றிக் கொள்ள உதவும்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

வருண் தவான்

இவர், தனது வீட்டின் சிறிய நகலாகவே வேனிட்டி வேனை மாடிஃபை செய்துள்ளார். எப்போதும் வீட்டுக்குள் இருக்கும் உணர்வை ஏற்படுத்துக் கொள்ளும் விதமாக இவ்வாறு அதனை மாடிஃபை செய்துள்ளார்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

சஞ்சய் தத்

டிசி நிறுவனத்தின் கை வண்ணத்தில் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களில் சஞ்சய் தத்தின் வேனிட்டி வேனும் ஒன்று. சிங்கிள் ஆக்ஸில் வால்வோ பேருந்தையே அவரது தேவைக்கேற்ப மாடிஃபை செய்துள்ளார். இதனால், ஆடம்பர கோச்சாக மாறியுள்ளது வால்வோ பேருந்து. இதன் இருக்கைகள் அனைத்தும் சுகமான உணர்வை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய கேப்டைன் இருக்கையில் மிக அதிக சொகுசு வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

அஜய் தேவ்கன்

அதிரடி திரைப்படங்களுக்கு பெயர் போனவர் அஜய் தேவ்கன். இவரிடத்தில் ஏராளமான சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இத்துடன், அரண்மனை போல் வசதிகொண்ட வேனிட்டி வேனும் அடங்கும். உள் கட்டமைப்பு மட்டுமின்றி இந்த வேனின் பக்கத்திற்கும் உரு மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வேன் ஸ்டார் வாரில் வாகனத்தைப் போன்று மாறியிருக்கின்றது.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

இந்த வேனில் படுக்கையறை மட்டுமின்ற பல அறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில், கிட்சன் மற்றும் அலுவலகம் உள்ளிட்டவையும் அடங்கும்.

இதுதவிர, டிவி, மியூசிக் சிஸ்டம் மற்றும் ட்ரிங்க்ஸ்களை கூலிங்காக வைத்துக் கொள்ளும் மினி ஃபிரிட்ஜ் உள்ளிட்டவையும் அதில் இடம்பெற்றிருக்கும்.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

அல்லு அர்ஜூன்

தெலங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் அல்லு அர்ஜூனும் ஒருவர். இவர் கடந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே தனிப் பயன்பாட்டிற்காக மினி வேன் ஒன்றை வேனிட்டி வாகனமாக மாற்றினார். இவரும் டிசி நிறுவனத்தின் கை வண்ணத்திலேயே அதனை உல்லாச கப்பலுக்கு இணையாக மாடிஃபை செய்திருக்கின்றார். இதில் டிவி, மசாஜ் இருக்கை, மீட்டிங் ஸ்பாட் மற்றும் மினி ஷோபா உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சாதா வேன்களை உல்லாச கப்பலாக மாற்றிய நடிகர்கள்.. விக்ரம் டூ ஷாருக்கான் பயன்படுத்தும் வேனிட்டி வேன்கள்!

சியான் விக்ரம்

நடிகர் விக்ரமும் தனது தனி பயன்பாட்டிற்காக மினி வேன் ஒன்றை டிசி நிறுவனத்தின் மூலம் மாடிஃபை செய்ததாத அண்மையில் தகவல் வெளியாகியது. இதனை டிசி2 நிறுவனமே அதன் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருந்தது.

மாடிஃபிகேஷனால் அந்த வேன் மினி சொர்க்கமாகவே உருமாறியுள்ளது. இந்த வேனிலும் ஆடம்பரம் முதல் அத்தியாவசிய தேவைக்கான அனைத்து வசதிகளும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, April 27, 2020, 20:28 [IST]
English summary
Actors & Their Vanity Vans. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+