இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

4x4 சிஸ்டத்தைப் பெற்ற கார்களால் மட்டுமே செய்யக் கூடிய சாகசங்களின் தகவலை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

நான்கு சக்கர வாகன விரும்புகளின் முதன்மையான தேர்வுகளில் எஸ்யூவி ரக கார்களே முக்கிய இடத்தில் இருக்கின்றது. அதிலும், மிக முக்கியமாக சாகச பயண விரும்புகளிடத்தில் இந்த ரக கார்களுக்கு எப்போதுமே ஏக போகமான வரவேற்பு காணப்படுகின்றது.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

எஸ்யூவி ரக கார்கள் என்றாலே அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கரடு, முரடு என எந்த மாதிரியான சாலையையும் சமாளிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். இதனாலயே இந்த கார்கள் சாகச பயண விரும்புகளின் முதல் தேர்வாக இருந்து வருகின்றது.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

முந்தைய காலங்களில் எஸ்யூவி ரக கார்கள் பெரும்பாலும் பந்தயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை, பந்தய களத்தின் மேடு, பள்ளம் என எதையும் பாராமல் அசர வைக்கின்ற வகையில் திறனை வெளிப்படுத்தும். இதைத்தொடர்ந்தே, வழக்கமான சாலைகளின் பயன்பாட்டிலும் இந்த கார்கள் களமிறக்கப்பட்டன.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

எஸ்யூவி காரின் அசாத்தியமான திறனக்கு அதன் 4X4 சிஸ்டமே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆனால், தற்போது விற்பனைக்கு வரும் சில எஸ்யூவி கார்களில் இந்த அமைப்பு இடம்பெறுவதில்லை. இந்த 4X4 சிஸ்டத்தைக் கொண்ட எஸ்யூவி கார் மிகக் கடுமையான பாதைகள் மற்றும் களங்களை மிக எளிதில் கடந்துவிடும். இதனாலயே, மற்ற ரக கார்களால் செய்ய முடியாத சில சாகசங்களை எஸ்யூவி ரக கார்கள் மிகவும் அசால்டாக செய்துவிடுகின்றன.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

குறிப்பாக, குறைந்தளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான் ரக கார்களால் சாகச பயணங்கள் என்பது சாத்தியமற்ற ஒன்று. இருப்பினும், ஒரு சிலர் செடான் ரக காரை மாடிஃபை செய்து அதனை சாகச பயணத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், அது எஸ்யூவி கார்களுக்கு இணையாக செயல்பட முடிாதது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், 4X4 அமைப்பைக் கொண்ட எஸ்யூவி கார்களால் மட்டுமே செய்யக்கூடிய சில சாகசங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

டிவைடர்களை தாண்டும் திறன்

இராணுவ வீரர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அரசின் அமலாக்கத்துறைகள் பல 4X4 ரக கார்களைப் பயன்படுத்த இந்த திறனே முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பாக, எம்மாதிரியான சாலைகளாக இருந்தாலும் மிகவும் அசால்டாக "யு டர்ன்" எடுத்து இந்த கார்களால் பின்னோக்கி செல்ல முடியும். இந்த திறன் எதிரிகளை விரட்டிச் சென்று பிடிக்க உதவும்.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

ஆனால், பொதுமக்கள் டிவைடர்களை தாண்டிச் செல்ல பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இந்த செயல் அவர்களுக்கு அபராதம் போன்ற கடுமையான தண்டனைகளைப் பெற வழி வகுக்கும். ஓர் எஸ்யூவி ரக கார் எவ்வாறு டிவைடரை அசால்டாக கடக்கும் என்பதற்கான வீடியோ கீழே கொடுத்துள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

படிக்கட்டுகளில் ஏறுதில்

சாதாரணமாக எந்தவொரு காராலும் இந்த காரியத்தை அவ்வளவு செய்துவிட முடியாது. குறிப்பாக செடான் ரக கார்களின் முன்புறத்தோற்றம் படிக்கட்டு ஏறுதல் போன்றவற்றிற்கு ஒத்துழைக்காது. ஏன், ஒரு சில எம்பிவி ரக கார்கள் கூட இந்த செயலுக்கு ஒத்துழைக்காது. ஆனால், ஜீப் போன்ற எஸ்யூவி மற்றும் எம்யூவி கார்கள் இதனை அசால்டாக செய்துவிடும்.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

அதாவது, 4X4 சிஸ்டமுடைய கார்களின் சஸ்பென்ஷன் அமைப்பு படிக்கட்டில் ஏறுவதற்கான திறனை எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வழங்கும். இதனை வெளிக்கொணரும் வகையில் மஹிந்திரா தார் படிகட்டுகளை ஏறும் சாகச வீடியோவை தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

மணல் நிறைந்த பாதை

முந்தைய காலங்களில் கடற்கரையோர சாலையில் உல்லாச பயணம் சென்ற ஒரு சில கார்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிக்கியிருப்பதை நாம் கண்டிருப்போம். அதில் பெரும்பாலான கார்கள் 4X4 சிஸ்டத்தைப் பெறாத கார்களாகவே இருக்கின்றன. ஆனால், இந்த சிஸ்டத்தைப் பெற்ற கார்கள் மணல் குவியல் மட்டுமல்ல குன்றுகள் மீதும்கூட மிக அசால்டாக ஏறிவிடும்.

இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

குறிப்பாக, மணலில் வீல்கள் புதைப்படாமல் அவை சர்வசாதாரணமாக செல்லும். அந்தவகையில், புதிய தலைமுறை ஃபோர்டு என்டீயோவர் கார் ஒன்று மணல் பாதையை மிகவும் எளிதாக கடக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளோம். இதுவே எஸ்யூவி ரக காரில் இருக்கும் அசாத்திய திறன்களில் ஒன்று.

ஆறுகளில் நீந்தும் திறன்

பொதுவாக, எஸ்யூவி கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று கூடுதல் என்பதால் கரடு, முரடான பாதைகளைப் போன்று ஆற்றுப்படுகையையும் மிக எளிதில் கடக்கின்றன. அதுமட்டுமின்றி இதன் உயரம் சற்று கூடுதல் என்பதால் நீரில் சிக்கிக் கொள்ளாமல் அதில் இருந்து மிகவும் எளிதில் அவை வெளியேறிவிடுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மாருதி சுசுகி ஜிப்ஸியின் சாகச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

எளிதில் இழுக்கும் திறன்

எஸ்யூவி கார்கள் பெரும்பாலானவற்றில் அதிக இழுவை திறன் பயன்படுத்தப்படுவதால், அவை அதைக் காட்டிலும் பல மடங்கு பெரிய உருவமுள்ள வாகனங்களைக் கூட கணப்பொழுதில் வெளியேற்றிவிடும். இதற்கு எஸ்யூவி கார்களின் 4x4 அமைப்பும் ஓர் காரணம் ஆகும். இதை உறுதிச் செய்யும் வகையில் டொயோட்டா பார்ச்சூனர் கார் மிகப்பெரிய லாரி ஒன்றை பள்ளத்தில் இருந்து வெளியேற்றும் வீடியோவை வழங்கியுள்ளோம்.

மேற்கூறியதைப் போன்ற அனைத்து சாகசங்களையும் எஸ்யூவி மற்றும் எம்யூவி போன்ற 4x4 சிஸ்டத்தைப் பெற்றிருக்கும் கார்களால் மட்டுமே செய்ய முடியும். இருப்பினும், இம்மாதிரியான சாகசங்களை மற்ற ரக கார்கள் சில மாடிஃபிகேஷன்கள் மூலம் செய்கின்றன. ஆனால் எந்தவொரு மாடிஃபிகேஷனும் இல்லாமல் 4x4 சிஸ்டத்தைக் கொண்ட கார்கள் அசாதாரணமான செயல்களை மிகவும் அசால்டாக செய்து விடுகின்றன.

Most Read Articles
English summary
Adventures That Can Be Only Done 4x4 Capable Cars. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X