குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

இந்தியாவில் சன் ரூஃப் அம்சத்துடன் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

இந்தியாவில் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும், அண்மைsக் காலங்களாக சொகுசு ரக வாகனங்களுக்கான வரவேற்பு கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது ஏகபோகமாக அதிகரித்து வண்ணம் உள்ளது. இதற்கு சொகுசு அம்சங்கள் மீது இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதீத மோகமே மிக முக்கியமான காரணம் ஆகும்.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

அதேசமயம், வாங்கப்படும் வாகனம் அவர்கள் செலவழிக்கும் தொகைக்கு ஏற்றதாக இருகின்றதா என்பதிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

குறிப்பாக, மிருதுவான இருக்கை, சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு, அதிக இட வசதி மற்றும் சன்ரூஃப் வசதி உள்ளிட்ட பிரிமியம் வசதிகள் இருக்கின்றதா என்பதில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

MOST READ: இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

அதிலும், சன் ரூஃப் அம்சம் கொண்டிருக்கும் கார்கள்மீது இனம்புரியாத ஆவலை இந்தியர்கள் செலுத்துகின்றனர். இந்த அம்சம் முன்னதாக அதிக விலைக் கொண்ட பிரிமியம் ரக கார்களில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், இப்போது இந்நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

அதாவது, சில குறைந்த விலை கார்களிலும் இந்த அம்சம் ஆப்ஷனலாக கிடைக்கத் தொடங்கியுள்ளது.

அதேசமயம், இந்த அம்சத்தின்மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுவதால், சில டீலர்கள் மாடிஃபிகிஷேன் வாயிலாக சன் ரூஃப் வசதியை வழங்கி வருகின்றனர்.

MOST READ: ஹீரோ எக்ஸ்ல்ஸ் மாடலுக்கு போட்டியாக அட்வென்ஜெர் பைக்கை களமிறக்கும் யமஹா...

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

எனவே, இந்த அம்சம் எம்மாதிரியான கார்களில் எல்லாம் கிடைக்கின்றது, அதில் விலை குறைந்த கார் எது என நம்மில் பலர் தேடி வருகின்றனர். இந்த தேடலை தீர்க்கும் விதமாக இந்தியாவில் குறைந்த விலையில், சன் ரூஃப் ஆப்ஷனுடன் கிடைக்கும் கார்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். அவை:

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

ஹூண்டாய் வென்யூ எஸ்எக்ஸ்

ஹூண்டாய் நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்த மலிவு விலை கார்தான் இந்த வெனியூ. இந்த காரை அதிநவீன தொழில்நுட்பமான ப்ளூ லிங்க் அம்சத்துடன் அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் பல வசதிகளை நம்மால் போன் மூலமாகவே இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

MOST READ: டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

இதுமட்டுமின்றி பற்பல பிரிமியம் வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றுதான் சன் ரூஃப் வசதி. இதனை எலக்ட்ரானிக் ஸ்விட்ச் மூலமே கன்ட்ரோல் செய்ய முடியும்.

இந்த தேர்வு வெனியூவின் எஸ்எக்ஸ் வேரியண்டில் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றது. இந்த வேரியண்ட் ரூ. 9.78 லட்சம் என்ற அதிகபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த அம்சத்துடன் கிடைக்கும் மலிவு விலை கார் இதுவே ஆகும். மேற்கூறப்பட்ட விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். எனவே, இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

டாடா நெக்ஸான் எக்ஸ்இசட்+ எஸ்

டாடா நிறுவனம் சன் ரூஃப் ஆப்ஷனை வழங்குவதை விரும்பவில்லை. இது ஆபத்தானது என டாடா உணர்வதாக கூறப்படுகின்றது. ஏனெனில் இந்தியர்கள் பலர் ஜாலி ரைடு செல்லும்போது சன் ரூஃபை வாயிலாக வெளியே எட்டி பார்த்த வண்ணம் செல்கின்றனர். இது அவர்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும். எனவே சன் ரூஃப் தேர்வை இத்தனை காலங்கள் வழங்காமலே டாடா இருந்து வந்தது.

MOST READ: ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

ஆனால், சந்தையின் தேவையை உணர்ந்த டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் எஸ்யூவி கார்களில் இந்த தேர்வை அறிமுகம் செய்தது. இவையும் எலக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடியவை ஆகும்.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

டாடா நிறுவனம் இந்த தேர்வை சமீபத்தில்தான் அறிமுகம் செய்தது. அதுவும், இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த கார் என்று அழைக்கப்படும் நெக்ஸானின் எக்ஸ்இசட்+ எஸ் வேரியண்டில் சன் ரூஃபை தேர்வை வழங்கியது. இந்த கார் இந்தியாவில் ரூ.10.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ்

சப்-4 மீட்டரில் வெளிவந்த முதல் எஸ்யூவி ரக கார் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் டைட்டானியம் ஆகும். இது 2018ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் எலக்ட்ரானிக் சன் ரூஃப் ஆப்ஷன் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் இந்தியாவில் ரூ. 10.53 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதேசமயம், இந்த சன் ரூஃப் தேர்வு டைட்டானியம் ப்ளஸ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றது.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ்

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட வெர்னா காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பிரிமியம் கேபின் தரத்தில் காட்சியளிக்கும் இந்த காரில் எலக்ட்ரானிக் சன் ரூஃப் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் ரூ. 10.7 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

குழந்தைகள்-இளைஞர்கள் விரும்பும் சன்ரூஃப் அம்சத்துடன் கிடைக்கும் குறைந்த விலை கார்கள்.. இதோ பட்டியல்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ8 (O)

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடல்களில் எக்ஸ்யூவி300 காரும் ஒன்றாகும். இந்த காரின் டாப் என்ட் வேரியண்டான எக்ஸ்யூவி300 டபிள்யூ8 (O) மாடலில் மட்டுமே சன் ரூஃப் தேர்வு கிடைக்கின்றது. இந்த வேரியண்ட் அதிகபட்சமாக ரூ. 11.84 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Affordable Sunroof Cars In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X